என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில்  கூடு கட்டி குஞ்சு பொரித்த ஊர் குருவி
    X

    பைக்கில் கூடு கட்டி குஞ்சு பொரித்த ஊர் குருவி

    • வாகனத்தின் டேஸ்போர்டில் பறவை கூடு கட்டி இருந்தது..
    • இருசக்கர வாகனத்தை எடுக்காமல் அப்படியே, அங்கேயே விட்டுவிட்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தோட்டகிரி சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் டேவிட்மாறன். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர், தான் பயன்படுத்தி வந்த ஒரு 2 சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு 10 நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்தார். அதன் பின்பு அந்த வாகனத்தை அவர் எடுக்க முற்பட்டபோது, இருசக்கர வாகனத்தின் முன் பகுதி டேஸ்போர்டில் பறவை ஒன்று கூடு கட்டி இருப்பதை பார்த்தார்.

    இதையடுத்து சற்றும் யோசிக்காத டேவிட்மாறன் பறவை கூடு கட்டி வாழ்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்காமல் அப்படியே, அங்கேயே விட்டுவிட்டார்.

    கடந்த 2 மாதங்களாக அந்த வாகனத்தை அவர் எடுக்காமல் வீட்டில் முன்பு நிறுத்தி இருந்தார். தற்போது அவரது இரு சக்கர வாகனத்தில் ஊர் குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது.

    கீச் கீச் என சத்தமிடும் அந்த குஞ்சுகளும்,அதன் தாயும் வசிப்பதற்காக அந்த வாகனத்தை அப்படியே விட்டு விட்டார்.

    குஞ்சுகள் பெரிதாகி தாய் பறவையுடன் அங்கிருந்து சென்ற பிறகு தனது வாகனத்தை பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார். இவரது செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×