என் மலர்
கிருஷ்ணகிரி
- எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும்.
- போதைப் பொருட்களால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இப்பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாராணி தொடங்கி வைத்து பேசுகை யில், பள்ளி மாணவர்கள், பள்ளிப் பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை வஸ்து போன்ற பழக்கங்களுக்கு உள்ளாகக் கூடாது.
கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் பயன்படுத்தும் சகமாணவர்கள் அல்லது பயன்படுத்த வற்புறுத்தும் மாணவர்கள் குறித்த தகவலை எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும். போதைப் பொருட்களால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் போதைப் பொருட்களை பயன்படு த்தக்கூடாது என்றார்.
இப்பேரணி மேல்சோ மார்பேட்டை வழியாக கடைத்தெருவரை சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. இதில், உதவி தலைமை ஆசிரியர் விஜய், போதைப் பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கழிவுகளை இரவு நேரங்களில் தினமும் மூட்டை மூட்டையாக சிலர் எடுத்து சாலையோரங்களில் வீசி செல்கிறார்கள்.
- மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி உள்பட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள், கோழி, ஆடு, இறைச்சி கடைகள், மற்றும் முடி திருத்தும் கடைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை இரவு நேரங்களில் தினமும் மூட்டை மூட்டையாக சிலர் எடுத்து சாலையோரங்களில் வீசி செல்கிறார்கள். இதனால் மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதனை சம்மந்தபட்ட ஊராட்சி நிர்வாகிகள் அதிகாரிகள் உடனடியாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
- மண்டல தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில்,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான ஆனந்தய்யா தலைமை தாங்கி முகாமினை தொடங்கிவைத்தார்.
மண்டல தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் தொகுதி பொறுப்பாளரும், கொள்கைபரப்பு குழு துணை செயலாளருமான வேலூர் ரமேஷ், விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.
மேலும் இதில், கட்சியினர், மாநகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கிறிஸ்தவ தேவால யங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கே ற்றனர்.
கிருஷ்ணகிரி,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் யாவரையும் இரட்சிக்க வந்த இயேசு, யுத மன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து இயேசு கொல்லப்பட்டார்.
இதனை நினைவு கூறும் வகையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் இந்த நாளை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் ஆலயத்தில், புனித வெள்ளியையொட்டி பெரிய சிலுவைப்பாதை நடைபெற்றது.
பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பெரிய சிலுவைப் பாதையின் போது, ஆலய வளாகத்தினை சுத்தி அமைக்கப் பட்டுள்ள 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் முன்பாக, இயோசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோள்களில் பாரமான சிலுவையை சுமந்து, தங்களை வருந்திக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கே ற்றனர்.
இதே போல கந்திகுப்பம், சுண்டம்பட்டி,எலத்தகிரி, புஷ்பகிரி ஓசூர், தேன்கனி க்கோட்டை, சூளகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி புனித இருதய ஆண்டவர் ஆலயம், கோவிலூர் சவேரியார் ஆலயம், பொம்மிடி கோடிய அற்புதர், புனித அந்தோனியார் ஆலயம், பி.பள்ளிப்பட்டி லூர்து அன்னை ஆலயம், அரூர் இருதய ஆண்டவர் ஆலயம், பாப்பிரெட்டிப்பட்டி வேளாங்கண்ணி ஆலயம், தென்கரை கோட்டை பாத்திமா அன்னை ஆலயம் உள்பட மாவட்டம் முழு வதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிகளை அந்தந்த ஆலயபங்கு தந்தை களும், பங்கு குழுவினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
- கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது.
- பேரூராட்சியில் பணி யாற்றும் துப்புரவு பணியா ளர்களை கவுரவித்தும், மலர்கள் தூவியும் அனைவருக்கும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், கெலமங்கலத்தில் பா.ஜ.க தொடங்கி 44-வது ஆண்டை முன்னிட்டு கெலமங்கலம் பா.ஜ.க.சார்பாக கொண்டா டப்பட்டது.
இதில் பாஜக மாவட்ட மேற்கு தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேரூராட்சியில் பணி யாற்றும் துப்புரவு பணியா ளர்களை கவுரவித்தும், மலர்கள் தூவியும் அனைவருக்கும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.
ஒன்றிய தலைவர் சந்துரு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ஸ்ரீனிவாசரெட்டி, மாவட்ட செயலாளர் குரப்பா, ஆனந்த, ஜக்கேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ், ஜெயசங்கர், ராஜான்னா, முனிராஜ், மஞ்சுநாத் ஒன்றிய துணை தலைவர் ரவி போன்ற பலர் கலந்துகொண்டனர்.
- பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
- தேன்கனிக்கோட்டை - அருளாலம் (சாலிவாரம்), அஞ்செட்டி- தாம்ச னப்பள்ளி ஆகிய கிராம ங்களில் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 8 இடங்களில் பொது விநியோகத்திட்டம் சம்பந்தமாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது வினியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் கோதிகுட்லப்பள்ளி, ஊத்தங்கரை - வீரணகு ப்பம், போச்சம்பள்ளி - தாமோதரஅள்ளி, பர்கூர்- தொகரப்பள்ளி கூட் ரோடு (புலிகுண்டா), சூளகிரி - உலகம், ஓசூர் -எலுவப்பள்ளி (பாகலூர்), தேன்கனிக்கோட்டை - அருளாலம் (சாலிவாரம்), அஞ்செட்டி- தாம்ச னப்பள்ளி ஆகிய கிராம ங்களில் நடைபெறுகிறது.
எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து 80-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
- பிரகாஷ் எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டிய அந்த பகுதியும் துறைக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படின் இந்த ஆண்டில் அறிவிப்பில் சேர்க்க, முதலமைச்சரின் அனுமதியை பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்”.
ஓசூர்,
ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், நேற்று சட்டசபையில் பேசியதாவது:-
"எனது ஓசூர் தொகுதிக்குட்பட்ட நல்லூர் ஊராட்சி, சேவகானபள்ளி ஊராட்சி மற்றும் ஈச்சங்கர் ஊராட்சி பகுதிகளில் மின்னழுத்தம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, நல்லூர் ஊராட்சி, ஓசூர் மாநகராட்சியை ஒட்டியும், குடியிருப்புகள் அதிகம் உள்ள காரணத்தினாலும் அங்கு ஒரு துணை மின் நிலையம் அமைக்க அரசு முன் வருமா?
இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த ஆண்டு புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து 80-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அந்த கோரிக்கைகள், துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனவே, பிரகாஷ் எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டிய அந்த பகுதியும் துறைக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படின் இந்த ஆண்டில் அறிவிப்பில் சேர்க்க, முதலமைச்சரின் அனுமதியை பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாசின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
- கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
- எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை மாவட்டம், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட புதிய உறுப்பினர்களின் சேர்க்கை விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்டது. ஏற்கனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இருந்து அதிகளவில் உறுப்பினர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் தற்போது பொதுச்செயலாளராக பதவி ஏற்றி இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.
இதற்கான உறுப்பினர் அட்டைகள் விரைவில் வழங்கப்படும். அதில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ படம் இடம் பெற்றிருக்கும்.
ஸ்டெர்லைட் குறித்து கவர்னர் கூறிய கருத்து வேதனை அளிக்கிறது. உயர்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள் பொது இடங்களில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது அழகல்ல. நமது நாட்டின் பிரதமர் உலகளவில் உள்ள தலைவர்கள் எல்லாம் போற்றக்கூடிய ஒரு தலைவராக திகழ்கிறார். அப்படிக்கு இருக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டின் சதியோ, வெளிநாட்டின் தலையிடோ இருக்க வாய்ப்பு இல்லை. இதனை பிரதமர் மோடி ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவர் நம் நாட்டின் தலைசிறந்த பிரதமர் ஆவார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமா? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து ஒவ்வொரும் வெவ்வேறான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து எங்கள் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்
- மாணவர்களின் உடல் நலன் கருதியும், உடலுக்கு தீங்கிளைக்கும் குடிநீர் பாட்டில்களைத் தவிர்க்கவும், வெயில் காலத்திற்கு ஏற்றவாறு இந்த வாட்டர் பாட்டில்களை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சுயஉதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு மகளிர் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. சமுதாய முன்னேற்றத்திலும், மகளிர் முன்னேற்றத்திலும் வெற்றி கண்டுள்ள ஐ.வி.டி.பி நிறுவனம் கல்விச் சேவையிலும் சிறப்பாக பங்காற்றி வருகிறது.
அந்த வகையில் தற்போது மாணவ, மாணவியரின் உடல் நலன் கருதி அவர்களுக்கு தண்ணீர் பருகுவதற்கு ஏதுவாக, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியின் 2100 மாணவிகளுக்கு ரூ.1.68 லட்சம், எலத்தகிரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியின் 1590 மாணவ, மாணவியருக்கு ரூ.1.27 லட்சம், கிருஷ்ணகிரி ஆண்கள் துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியின் 1600 மாணவர்களுக்கு ரூ.1.28 லட்சம், ஓசூர் புனித ஜான் போஸ்கோ பள்ளியின் 1305 மாணவியருக்கு ரூ.1.04 லட்சம், கிருஷ்ணகிரி புனித அன்னாள் துவக்கப் பள்ளியின் 1200 மாணவிகளுக்கு ரூ.96 ஆயிரம், பர்கூர் செயின்ட் ஜோசப் உடல் மற்றும் சமூக நலமையம் 50 மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம், திருப்பத்தூர் மேரி இமாகுலேட் பள்ளியின் 650 மாணவியருக்கு ரூ.52 ஆயிரம், ஆரணி புனித ஜோசப் குழந்தைகள் இல்லத்தின் 250 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான வாட்டர் பாட்டில்களை ஐ.வி.டி.பி நிறுவனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வாட்டர் பாட்டில்களை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர், மாணவர்களின் உடல் நலன் கருதியும், உடலுக்கு தீங்கிளைக்கும் குடிநீர் பாட்டில்களைத் தவிர்க்கவும், வெயில் காலத்திற்கு ஏற்றவாறு இந்த வாட்டர் பாட்டில்களை வழங்கியதாகவும், மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இவ்வருடத்தில் 8745 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான வாட்டர் பாட்டில்கள் ஐ.வி.டி.பி மூலம் வழங்கப்பட்டுள்ளது என ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.
- பையில் 10 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது.
- இதன் மதிப்பு ரூ.10,880 ஆகும். உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகயைில் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரியகலையமுத்தூரைச் சேர்ந்த இமாம்தீன் (வயது55) என்பதும், அவர் கொண்டு வந்த பையில் 10 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10,880 ஆகும். உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான இமாம்தீன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை யாரிடமிருந்து அவர் வாங்கி வந்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாமரங்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
- வருகிற 11-ந் தேதி, மாவிவசாயிகளுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் மாமரங்களில் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சித் தாக்குதல் தடுத்து, இழப்பீடு வழங்கிட வேண்டும் என மா விவசாயிகள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் வலியுறுத்தினர்.
அப்போது, பூச்சித் தாக்குதல் ஏற்பட்ட மாங்காய்கள் கலெக்டரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக மாஆராய்ச்சியாளர்கள் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள், விவசாயிகளுடன் சிறப்பு மா ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிலையில், காவேரிப்பட்டணம், பர்கூர் மற்றும் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாந்தோட்டங்களில் பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி உரம் மற்றும் மருந்துகள் தரக்கட்டுபாடு அலுவலர் அறிவழகன் தலைமையில் ஜீனூர் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஸ்ரீவித்யா, திலகம், பையூர் ஆராய்ச்சி மண்டல தலைவர் சிவக்குமார், கேவிகே ஆராய்ச்சி மண்டல தலைவர் சுந்தரராஜன், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறையை சேர்ந்த சரவணன், சித்ரா மற்றும் அலுவலர்கள் மாமரங்களில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான பூக்கள், காய்களை சேகரித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மாமரங்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கையை கலெக்டரிடம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். வருகிற 11-ந் தேதி, மாவிவசாயிகளுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
நிகழாண்டில் பூச்சித் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும். மாமுத்தரப்பு கூட்டமும் விரைந்து நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழகள் வழங்கப்பட்டன.
- மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா "ப்ரெடிக்டர் 2047" என்ற தலைப்பில் நடந்தது.
இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அறங்காவலர் லாசியா தம்பிதுரை, பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கினர்.
மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழகள் வழங்கப்பட்டன. இதில் அசாரின் மிமிக்கிரி நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த விழாவில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியின் அறங்காவலர் சுரேஷ்பாபு, வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் இயக்குனர் விஜயலட்சுமி, வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பொறியாளர் சரவணன், தொழிலதிபர்கள் வேலாயுதம், ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.






