என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது
    X

    புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது

    • பையில் 10 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது.
    • இதன் மதிப்பு ரூ.10,880 ஆகும். உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகயைில் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரியகலையமுத்தூரைச் சேர்ந்த இமாம்தீன் (வயது55) என்பதும், அவர் கொண்டு வந்த பையில் 10 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10,880 ஆகும். உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான இமாம்தீன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை யாரிடமிருந்து அவர் வாங்கி வந்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×