பா.ஜ.க.வின் 44-வது ஆண்டு தொடக்கவிழா

கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது.பேரூராட்சியில் பணி யாற்றும் துப்புரவு பணியா ளர்களை கவுரவித்தும், மலர்கள் தூவியும் அனைவருக்கும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.
பா.ஜ.க.வின் 44-வது ஆண்டு தொடக்கவிழா
Published on

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், கெலமங்கலத்தில் பா.ஜ.க தொடங்கி 44-வது ஆண்டை முன்னிட்டு கெலமங்கலம் பா.ஜ.க.சார்பாக கொண்டா டப்பட்டது.

இதில் பாஜக மாவட்ட மேற்கு தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேரூராட்சியில் பணி யாற்றும் துப்புரவு பணியா ளர்களை கவுரவித்தும், மலர்கள் தூவியும் அனைவருக்கும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.

ஒன்றிய தலைவர் சந்துரு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ஸ்ரீனிவாசரெட்டி, மாவட்ட செயலாளர் குரப்பா, ஆனந்த, ஜக்கேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ், ஜெயசங்கர், ராஜான்னா, முனிராஜ், மஞ்சுநாத் ஒன்றிய துணை தலைவர் ரவி போன்ற பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com