என் மலர்
நீங்கள் தேடியது "வாட்டர் பாட்டில்கள்"
- மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்
- மாணவர்களின் உடல் நலன் கருதியும், உடலுக்கு தீங்கிளைக்கும் குடிநீர் பாட்டில்களைத் தவிர்க்கவும், வெயில் காலத்திற்கு ஏற்றவாறு இந்த வாட்டர் பாட்டில்களை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சுயஉதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு மகளிர் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. சமுதாய முன்னேற்றத்திலும், மகளிர் முன்னேற்றத்திலும் வெற்றி கண்டுள்ள ஐ.வி.டி.பி நிறுவனம் கல்விச் சேவையிலும் சிறப்பாக பங்காற்றி வருகிறது.
அந்த வகையில் தற்போது மாணவ, மாணவியரின் உடல் நலன் கருதி அவர்களுக்கு தண்ணீர் பருகுவதற்கு ஏதுவாக, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியின் 2100 மாணவிகளுக்கு ரூ.1.68 லட்சம், எலத்தகிரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியின் 1590 மாணவ, மாணவியருக்கு ரூ.1.27 லட்சம், கிருஷ்ணகிரி ஆண்கள் துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியின் 1600 மாணவர்களுக்கு ரூ.1.28 லட்சம், ஓசூர் புனித ஜான் போஸ்கோ பள்ளியின் 1305 மாணவியருக்கு ரூ.1.04 லட்சம், கிருஷ்ணகிரி புனித அன்னாள் துவக்கப் பள்ளியின் 1200 மாணவிகளுக்கு ரூ.96 ஆயிரம், பர்கூர் செயின்ட் ஜோசப் உடல் மற்றும் சமூக நலமையம் 50 மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம், திருப்பத்தூர் மேரி இமாகுலேட் பள்ளியின் 650 மாணவியருக்கு ரூ.52 ஆயிரம், ஆரணி புனித ஜோசப் குழந்தைகள் இல்லத்தின் 250 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான வாட்டர் பாட்டில்களை ஐ.வி.டி.பி நிறுவனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வாட்டர் பாட்டில்களை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர், மாணவர்களின் உடல் நலன் கருதியும், உடலுக்கு தீங்கிளைக்கும் குடிநீர் பாட்டில்களைத் தவிர்க்கவும், வெயில் காலத்திற்கு ஏற்றவாறு இந்த வாட்டர் பாட்டில்களை வழங்கியதாகவும், மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இவ்வருடத்தில் 8745 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான வாட்டர் பாட்டில்கள் ஐ.வி.டி.பி மூலம் வழங்கப்பட்டுள்ளது என ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.






