என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பட்டம் செய்து காற்றில் பறக்க விட்டு விளையாடி கொண்டிருந்த போது அங்கு மொட்டை மாடியில் உள்ள மின்கம்பி மீது மாட்டி கொண்டது.
    • குல்தீப் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவருடைய மகன் குல்தீப் (வயது 12). இவர் கோடை விடுமுறையில் சூளகிரி அருகே உள்ள காமன் தொட்டி பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்தார்.

    சம்பவத்தன்று பட்டம் செய்து காற்றில் பறக்க விட்டு விளையாடி கொண்டிருந்த போது அங்கு மொட்டை மாடியில் உள்ள மின்கம்பி மீது மாட்டி கொண்டது.

    இதனை எடுக்க சென்ற குல்தீப் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த கார் இவரின் மீது மோதியது.
    • படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த கார் இவரின் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அரசு அனுமதி இன்றி நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தார்.
    • அங்கு சாராயம் விற்பனை செய்த தங்க பொண்ணை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள வாலிப்பட்டி கிராம த்தைச் சேர்ந்தவர் தங்கப்பொ ண்ணு (வயது 60). இவர் அரசு அனுமதி இன்றி நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்த தங்க பொண்ணை கைது செய்தனர். பின்னர் சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • 3 பேர் மீன் கடையில் மது போதையில் வந்து தகராறு செய்து சதீஷை தாக்கினர்.
    • அருண், முனியப்பன் 2 பேரை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் சதீஷ் (வயது 32). இவர் கன்னண்ட அள்ளி பகுதியில் மீன் கடை நடத்தி வந்தார்.

    அப்போது பில்லகொ ட்டாய் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (வயது 22), அருண் (22), சசி (33) ஆகிய 3 பேரும் இவரது கடையில் மது போதையில் வந்து தகராறு செய்து சதீஷை தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் அருண், முனியப்பன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    இதில் தலைமறை வாகியுள்ள சசியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தொடர்ந்து அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் வெளியேறி வருகிறது.
    • குமட்டலை ஏற்படுத்தும் வகையில் குவியல், குவியலாக நுரை வெளியேறுவதால், பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று அணைக்கு, விநாடிக்கு 655 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 720 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த பல நாட்களாகவே, தொடர்ந்து அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் வெளியேறி வருகிறது. குமட்டலை ஏற்படுத்தும் வகையில் குவியல், குவியலாக நுரை வெளியேறுவதால், பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். மேலும், பொங்கி வரும் நுரை குவியலில், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெண் குழந்தைகளுக்கு பஸ்களில் செல்லும்போது பாதுகாப்பான பயணம் குறித்தும் விரிவாக பேசினர்.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை பற்றி விளக்கி கூறினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுக்கா க்களில் உள்ள பள்ளி பேருந்து ஓட்டுனர்கள், மற்றும் உதவியாளர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்றார்.

    இதில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், தேன்கனி க்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜய லட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தனியார் பள்ளி முதல்வர் ஷைலா, துணை முதல்வர் ஸ்ரீ தனா ஆகியோர் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கியும், மாணவர்களை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து செல்லுதல், அழைத்து வருதல் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு பஸ்களில் செல்லும்போது பாதுகாப்பான பயணம் குறித்தும் விரிவாக பேசினர்.

    முன்னதாக, நாமக்கல் அசோக் லேலண்ட் ஓட்டுனர் பயிற்சி மையத்தின் முன்னாள் மேலாளர் சுரேந்திரன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை பற்றி விளக்கி கூறினார்.

    இதில், 1,000 -க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது.
    • 67,470 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட மேலாண்மை அலகு சார்பாக முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள 133 பள்ளிகளில் 7 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தற்போது 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஊரக பகுதிகளில் 1217 பள்ளிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 35 பள்ளிகளிலும் என மொத்தம் 1252 பள்ளிகளில் உள்ள 67,470 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டம் முதல் கட்டமாக வருகிற ஜூன்மாதம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, கெலமங்கலம் மற்றும் தளி ஒன்றியம், பேரூராட்சிகளிலும், இரண்டாம் கட்டமாக வருகிற ஜூலை மாதம் ஊத்தங்கரை, மத்தூர், காவேரிப்பட்டணம் மற்றும் ஓசூர் ஒன்றியம், பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.

    இந்த கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான வந்தனா கார்க், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜாகீர்உசேன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சந்தானம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன், உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) பிரபாகர் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) கலந்துகொண்டனர்.

    • அணை தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதற்கு ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பும் ஒரு காரணம்
    • நாள் கணக்கில் தேங்கிக் கிடக்கும் ஆகாய தாமரைகளால், அணைக்கு வரும் நீரில் அடித்து வரப்படும் ரசாயன கழிவுகள் அப்படியே தங்கி விடுகின்றன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தென்பெண்ணையாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி பெங்களூரு நகர் வழியாக, தமிழகத்தின் கொடியாளம் கிராமத்தின் அருகே தமிழக பகுதிக்குள் நுழைகிறது.

    அப்பகுதியில் காட்டாறு வெள்ளம்போல் பாய்ந்த தென்பெண்ணையை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 1993ம் ஆண்டு கெலவரப்பள்ளி பகுதியில், அணை கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

    மொத்தம் 44.28 அடி கொண்ட இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு, முப்போக சாகுபடி நடைபெற்று வந்தது. அணையின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்ப ள்ளி, காமன்தொட்டி, அட்டக்குறுக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    நாளடைவில், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரில் சரிபாதி பெங்களூரு நகர தொழிற்சாலை கழிவுகள் அடித்து வருவது அதிகரித்தது. அதே வேளையில், ஆகாய தாமரை ஆக்கிரமிப்பும் அதிகரித்தது.

    இதனால், ஆற்றில் அடித்து வரப்படும் ரசாயன கழிவுகள் அணையிலேயே வண்டலாக தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறம் மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

    அணையிலிருந்து மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும்போது, நுரை பொங்கி வழிவது வாடிக்கையாக உள்ளது. அளவுக்கு அதிகமாக பொங்கும் நுரை, காற்றில் பறந்து சென்று வழிநெடுகிலும் உள்ள விளை நிலங்களில் படர்ந்து வருகிறது. ரசாயனம் கலந்த நுரை நாள் கணக்கில் மலைபோல் குவித்து கிடக்கிறது.

    தண்ணீர் பீய்ச்சி அடித்தாலும் கரையாமல் அப்படியே உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அணை தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதற்கு ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பும் ஒரு காரணம்.

    நாள் கணக்கில் தேங்கிக் கிடக்கும் ஆகாய தாமரைகளால், அணைக்கு வரும் நீரில் அடித்து வரப்படும் ரசாயன கழிவுகள் அப்படியே தங்கி விடுகின்றன. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரில், நுரை பொங்கி விளை நிலங்களில் பரவி வருகிறது.

    மேலும், கெலவரப்பள்ளி அணையை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் மாசடைந்துள்ளது. போர்வெல் மூலமாக எடுக்கப்படும் தண்ணீர் மிகவும் கலங்கலாக காணப்படுகிறது.

    அதனை குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 4 கி.மீ., தொலைவிற்கு சென்று மினரல் வாட்டர் வாங்கி வந்து பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

    அணை பகுதியில் கிடைக்க கூடிய மீன்கள் மிகவும் சுவை கொண்டதாக இருக்கும். தற்போது, மீன்கள் உற்பத்தி குறைந்து விட்டது. மேலும், கிடைக்க கூடிய மீன்கள் சாப்பிடுவதற்கு உகந்ததாக இல்லை. எனவே, அணையில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை முற்றிலுமாக அகற்றி சீர்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சா லைகளில் களப்பணியும் நடைபெறவுள்ளது.
    • தொழிலாளர்களும் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரியில் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1948ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் பிரிவு 5ன் படி, தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகி தங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவினை அமைத்து ஆணை பிறப்பித்தது.

    அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் செயலாளராகவும், சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப்-ஐ சார்ந்த மாடசாமி, சி.ஐ.டி.யூவை சேர்ந்த மகாலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி-ஐ சேர்ந்த ஜீவானந்தம், கோவில்பட்டி தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவைர் விஜய்ஆனந்த், ஆல் இந்தியா சேம்பர் ஆப் மேட்ச் இண்டஸ்ரீஸ் செயலாளர் நூர்முகமது மற்றும் சாத்தூர் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்படி குழுவின் கூட்டம் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சா லைகளில் களப்பணியும் நடைபெறவுள்ளது.

    எனவே, தீப்பெட்டி தயாரி க்கும் தொழில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளர்களும் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கலம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள் மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய இடங்களை பார்வையிடப்பட்டது.
    • அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா தொகரப்பள்ளி, ஐகுந்தம் பகுதிகளில் "காணத்தக்க கிருஷ்ணகிரி விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தின்" கீழ் நடுகற்கள், வணிகக்குழு கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையிலான விழிப்புணர்வு குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.

    இது குறித்து கலெக்டர் கூறுகையில், "காணத்தக்க கிருஷ்ணகிரி என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை" கடந்த மாதம் 29ம் தேதி முதல் பயணமாக மல்லசந்திரம் கற்திட்டைகள் பார்வையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (நேற்று) சனிக்கிழமை தொகரப்பள்ளி நடுகற்கள், ஐகுந்தம் வணிகக்குழு கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள் மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய இடங்களை பார்வையிடப்பட்டது.

    இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சார பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    வருகிற 13-ந் தேதி காலை அஞ்செட்டி பகுதியில் உள்ள மீட்டர் அருவி மற்றும் சில சுற்றுச்சூழல் தலங்களை மேற்படி குழு பார்வையிட உள்ளது என்றார். இந்த பயணத்தின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வந்தனாகார்க், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், சுற்றுலா அலுவலர் கஜேந்திரன், தாசில்தார் திலகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • எப்.எஸ்.எஸ்.ஏ மற்றும் ஐஎஸ்ஐ அனுமதி பெறாமல், பாதுகாப்பில்லா குடிநீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வரும் 2 குடிநீர் கம்பெனிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • சந்தேகத்திற்கிடமான 2 கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்கள், மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பகுப்பாய்வுக்கூடத்திற்கு.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் ேபரில் உணவுப்பாது காப்பு மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில், ஒசூர் உணவுப்பாது காப்பு அலுவலர் முத்து மாரியப்பன், தளி உணவு ப்பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் மற்றும் சூளகிரி உணவுப் பாது காப்பு அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழு, ஓசூர் ஒன்றியத்து க்கு உட்பட்ட நஞ்சாபுரம், கொத்த கொண்டபள்ளி,ஒசூர் தர்கா மற்றும் தளி ஒன்றிய ப்பகுதியை சேர்ந்த தளி, பேளகொண்டபள்ளி, அரசகுப்பம் ஆகிய இட ங்களில் திடீர் ஆய்வு மே ற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது எப்.எஸ்.எஸ்.ஏ மற்றும் ஐஎஸ்ஐ அனுமதி பெறாமல், பாதுகாப்பில்லா குடிநீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வரும் 2 குடிநீர் கம்பெனிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் சந்தேகத்திற்கிடமான 2 கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்கள், மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பகுப்பாய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.ஆய்வறிக்கையின் அடிப்ப டையில் சம்பந்தப்பட்ட குடிநீர் கம்பெனி உரிமையாளர்க ள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று வழங்கும் அப்ரண்டீஸ்சிப் சான்றிதழ் பெறலாம்.
    • தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை (8ம் தேதி) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நாளை (8-ம் தேதி) திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை, மாவட்ட அளவில் பிரதான் மந்திரி நேஷனல் அப்ரண்டிஸ்சிப் (தொழில் பழகுநர்) சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டும் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில், ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள், 10ம், 12ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி (பிஇ, பிஏ., பி.எஸ்சி, பி.காம்) கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐயில் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (என்.ஏ.சி) சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.

    மேலும், 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வித் தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரெஸ்ஸர் அப்ரண்டீஸாக சேர்ந்து தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

    இதே போல், டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வி தகுதியுடையவர்கள் ஆப்சனல் பிரிவுகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று வழங்கும் அப்ரண்டீஸ்சிப் சான்றிதழ் பெறலாம். தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும், ஓராண்டு சலுகையும் உள்ளது.

    இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.8,500 முதல் ரூ.16 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இம்முகாமில் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து பயன்பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு எம்/167, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி 2, ராயக்கோட்டை சாலை, கிருஷ்ணகிரி என்கிற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலும், 97879 70227, 70220 45795, 97860 50759 உள்ளிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×