search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, பேசியபோது எடுத்த படம்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • பெண் குழந்தைகளுக்கு பஸ்களில் செல்லும்போது பாதுகாப்பான பயணம் குறித்தும் விரிவாக பேசினர்.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை பற்றி விளக்கி கூறினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுக்கா க்களில் உள்ள பள்ளி பேருந்து ஓட்டுனர்கள், மற்றும் உதவியாளர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்றார்.

    இதில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், தேன்கனி க்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜய லட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தனியார் பள்ளி முதல்வர் ஷைலா, துணை முதல்வர் ஸ்ரீ தனா ஆகியோர் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கியும், மாணவர்களை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து செல்லுதல், அழைத்து வருதல் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு பஸ்களில் செல்லும்போது பாதுகாப்பான பயணம் குறித்தும் விரிவாக பேசினர்.

    முன்னதாக, நாமக்கல் அசோக் லேலண்ட் ஓட்டுனர் பயிற்சி மையத்தின் முன்னாள் மேலாளர் சுரேந்திரன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை பற்றி விளக்கி கூறினார்.

    இதில், 1,000 -க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    Next Story
    ×