என் மலர்
கிருஷ்ணகிரி
- மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
- கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகிலும், மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி, ராஜீவ் காந்தி படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவரது தலைமையில் கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன், , மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சரோஜா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல், அங்கிருந்த 3 பைக்குகள் மீது மோதினர்.
- மேலும் காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர்.
ஓசூர்,
தமிழக எல்லையில் கார் ஒன்று 3 பைக்குகளை மோதிவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை ஓசூர் அருகே ஆனேக்கல் தாலுக்கா அத்திப்பள்ளி காவல் நிலையத்திற்குட்பட்ட பள்ளூர் கிராமத்தில், தமிழக எல்லையான சிப்காட்டில் இருந்து பள்ளூர் கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்த காரை, தமிழ்நாடு போலீசார் வழிமறித்தனர்.
ஆனால் காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல், அங்கிருந்த 3 பைக்குகள் மீது மோதினர். மேலும் காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பைக்கில் வந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பைக்குகள் முற்றிலும் சேதமானது. தமிழக போலீசார் ஏன் காரை துரத்தினர். காரில் இருந்தவர்கள் யார்? காரில் ஏதேனும் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அந்த வழியாக பெங்களூரை நோக்கி சென்ற கார் ஒன்று மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
- படுகாயம் அடைந்த மான் சிறிது நேரத்தில் துடித்து துடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமளவில் வனப்பகுதிகள் உள்ளன இவற்றில் யானைகள், சிறுத்தை புலி கரடி மான் போன்ற விலங்குகள் ஏராளமாக உள்ளன இந்த விலங்குகள் அவ்வப்போது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் இடம்பெயர்ந்து கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று நேற்று மாலை கிருஷ்ணகிரி-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது.
அப்போது, அந்த வழியாக பெங்களூரை நோக்கி சென்ற கார் ஒன்று மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த மான் சிறிது நேரத்தில் துடித்து துடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள், இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.
- தென்றலரசி என்ற மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 2022-23ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.
இதில் தென்றலரசி என்ற மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதே போல் ரித்திகாஸ்ரீ - 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பரமேஸ்வரி- 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், பிரேம்குமார் -488, தமிழழகி - 488 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடத்தையும், ஷோபிகாஸ்ரீ -487 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதே போல் 11-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனரும், பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகரும், ராஜ்சாப உறுப்பினருமான தம்பிதுரை எம்.பி. பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பள்ளி தாளாளர் கூத்தரசன், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், தலைமை ஆசிரியர் குலசேகரபாண்டியன், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 22 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
- கள்ளச்சாராய காய்ச்சி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, பாஜக மகளிரணி சார்பில், கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி விமலா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவி மஞ்சுளா, ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர்கள் சிவபிரகாசம், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில மகளிரணி தலைவர் உமாரதிராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். கள்ளச்சாராய காய்ச்சி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூழக்கங்கள் எழுப்பினர்.
இதில், மாவட்ட துணை பொது செயலாளர்கள் மீசைஅர்ஜூனன், கோவிந்தராஜ், கவியரசு, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
- விஜயக்குமார் என்பவர் 412 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்தினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளில் 263 பேர் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர்.
இதில் கதிரேப் பள்ளியை சேர்ந்த சங்கரன் மகன் விஜயக்குமார் என்பவர் 412 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.இவருடைய அப்பா தனியார் கம்பெனியில் தினக்கூழியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் முத்தே கவுடா பி, டி, ஏ தலைவர் ராமன், பி, டி,எ , பொருளாலர் அஸ்பர் , செயலர் சுதாகர், பொது குழு ஜெபஸ்டின், ஆசிரியர் கணேசன் , ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டினர்.
- குடும்ப செலவுக்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு வந்ததாகவும் தெரிகிறது.
- மூர்த்தி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியை அடுத்த விளங்காமுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது48). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப செலவுக்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கடன் தொல்லையால் மனஅழுத்தத்துடன் காணப்பட்ட மூர்த்தி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த மூர்த்தியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஜீனூர் கிராமத்திற்கு சென்று, மாணவர் கீர்த்தி வர்மாவை பாராட்டி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
- முன்னாள் எம்எல்ஏ.செங்குட்டுவன், மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர் மகன் கீர்த்திவர்மா. இவருக்கு 4 வயது இருக்கும் வீட்டினங மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மாடியில் சென்ற மின்கம்பியை பிடித்ததில் இரு கைகளையும் இழந்தார்.
வேப்பனஹள்ளி ஒன்றியம் ஜீனூர் கிராமத்தில் தனது தாய் வீட்டிற்கு தனது மகன் கீர்த்திவர்மா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி சென்று விட்டார். நெடுருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். மேலும் அவருக்கு தேவையான உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும், மருத்துவ உதவிகளையும் செய்து தருவதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு தி.மு.க., அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்கள். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், ஜீனூர் கிராமத்திற்கு சென்று, மாணவர் கீர்த்தி வர்மாவை பாராட்டி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார். அதே போல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், அன்பரசன், ஒன்றிய செயலாளர்கள் தனசேகரன், கோவிந்தன், நிர்வாகிகள் சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதே போல், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி, மாணவர் கீர்த்தி வர்மா வீட்டிற்கு சென்று தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார். அத்துடன் மேல்நிலை கல்வி பயில தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதே போல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ., ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் சைலேஷ் கிருஷ்ணன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதே போல் வேப்பனப்பள்ளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ., வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளருமான முருகன், மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, ஒன்றிய செயலாளர் ரகுநாத், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முருகேசன், சதாசிவம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நரசிம்மன், தனம்ஜெயன், மாவட்ட பிரதிநிதி ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராகவன், பழனி, கிளை செயலாளர் முனுசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதே போல் தி.மு.க. கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், திமுக மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன், மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார், திமுக பிரதிநிதியும், தொழில் அதிபருமான கே.வி.எஸ்.சீனிவாசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜன், காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவி அம்சவேணி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த இரு கைகளையும் இழந்த மாணவர் கீர்த்தி வர்மாவை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று சந்தித்து, இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்ததுடன், மாணவரிடம் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
- மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து 2 மாடுகள் மற்றும் கன்று குட்டியை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார்.
- கூட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகச்சாரி என்பவரது வீட்டின் மீது தென்னை மரம் சாய்ந்து விழுந்தது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதிகளில் மாலையில் வெயில் மறைந்து திடீரென்று குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இந்த காற்று பின்னர் சூறாவளி காற்றாக வீசியது. இதைத்தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே ஆலங்கட்டிகளுடன் மழை பெய்தது.
இந்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மாறியது. இதனால் வெயிலால் வாட்டி வதைந்து கிடந்த ராயக்கோட்டை பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணிநேரம் பெய்த இந்த மழையால் ராயக்கோட்டையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இடிதாக்கி மாடுகள், கன்று சாவு
முன்னதாக ராயக்கோட்டை சிந்தேப்பள்ளியை அடுத்த பாவாடரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. அவரது தம்பி முனிசாமி. விவசாயிகளான இருவரும் தங்களது வீட்டின் முன்பு இருந்த கொட்டாகையில் மாடுகளை கட்டி வைத்து இருந்தனர். நேற்று பெய்த மழையின்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் இடிதாக்கி 2 மாடுகள், ஒரு கன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி முத்தன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம் ஆகியோர் நேரில் வந்து மாடுகளை இழந்து தவித்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் உடனே அரசு கால்நடை மருத்துவருக்கு வெங்கடசுப்ரமணி தகவல் தெரிவித்தார். உடனே மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து 2 மாடுகள் மற்றும் கன்று குட்டியை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார். அதன்பிறகு பலியான மாடுகளை விவசாயிகள் அடக்கம் செய்தனர்.
இதேபோன்று மழையின்போது வீசிய சூறாவளி காற்றால் கெலமங்கலம் எச்சட்டிஅள்ளி கூட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகச்சாரி என்பவரது வீட்டின் மீது தென்னை மரம் சாய்ந்து விழுந்தது.
இதில் விவசாயி நாகச்சாரி வீடு முழுவதும் சேதமடைந்தது. மரம் விழுந்ததில் விவசாயி வீட்டின் அருகே இருந்த மின்சார கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. இதனால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் அப்பகுதி கிராம மக்கள் இருளில் தவித்தனர்.
- விசாரணையில் தளி தைல மரத்தோப்பில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
- தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்து சென்று அங்குள்ள சுரேஷ்பாபுவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக் கோட்டை வட்டம் தளி அருகே ஒசபுரம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள தைல மரத்தோப்பில், உடல் எரிந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, தளி போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள மரத்தின் அருகே, பாலித்தின் பையில் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இந்த கிராமம், கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், கொலையானவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கர்நாடக மாநில எல்லையில் உள்ள போலீஸ் நிலை யங்களுக்கு தகவல் தெரிவித்து, விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த லூர்து சாமி மகன் சுரேஷ்பாபு என்கிற அலுமினிய சாமி (45) என்ற தொழிலாளி, மாயமானதாகவும், பெங்களூரு கெங்கேரி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் தளி தைல மரத்தோப்பில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் எதற்காக கொலை செய் யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்து சென்று அங்குள்ள சுரேஷ்பாபுவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
- பள்ளி மாணவி அமிர்தா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
- சமூக அறிவியலில் ஒரு மாணவர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஆர்.பி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவி அமிர்தா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் பாடவாரியாக தமிழ் 97 ஆங்கிலம் 97 கணிதம் 100 அறிவியல் 99 சமூக அறிவியல் 100 என மொத்தம் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் கணிதத்தில் இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறும், அறிவியலில் இரண்டு மாணவர்களும், சமூக அறிவியலில் ஒரு மாணவர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பொன்னுசாமி, பள்ளியின் முதல்வர் நிர்மலா, துணை முதல்வர் சக்திவேல், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பாராட்டி நினைவு பரிசை வழங்கினர்.
- நீச்சல் தெரியாத அறிவழகன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.
- அறிவழகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அயலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு அறிவழகன் (வயது23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்தார்.
இந்த நிலையில் மத்தூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அறிவழகன் வந்தார். நேற்று மாலை தனது அக்கா மகன்கள் மற்றும் உறவினர்களுடன் அறிவழகன் பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார். அங்கு அவர்கள் தடுப்பணையின் கரையோரமாக நீரில் குளித்து மகிழ்ந்தனர்.
இதில் நீச்சல் தெரியாத அறிவழகன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அப்போது உடன் உறவினர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். அதற்குள் அறிவழகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்துபோன அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அறிவழகனின் உடலை பார்த்து கதறிஅழுதனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






