என் மலர்
நீங்கள் தேடியது "மாணவனுக்கு பாராட்டு"
- விஜயக்குமார் என்பவர் 412 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்தினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளில் 263 பேர் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர்.
இதில் கதிரேப் பள்ளியை சேர்ந்த சங்கரன் மகன் விஜயக்குமார் என்பவர் 412 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.இவருடைய அப்பா தனியார் கம்பெனியில் தினக்கூழியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் முத்தே கவுடா பி, டி, ஏ தலைவர் ராமன், பி, டி,எ , பொருளாலர் அஸ்பர் , செயலர் சுதாகர், பொது குழு ஜெபஸ்டின், ஆசிரியர் கணேசன் , ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டினர்.
- கரூர் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6).
- சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.
கரூர் :
கரூர் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6).
இந்த மாணவன் அண்மையில் கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.
இதனையடுத்து மாணவன் முகமதுபாரிசுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் தர்மலிங்கம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.






