என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலம்ப போட்டியில் பரிசு பெற்ற மாணவனுக்கு பாராட்டு
    X

    சிலம்ப போட்டியில் பரிசு பெற்ற மாணவனுக்கு பாராட்டு

    • கரூர் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6).
    • சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.

    கரூர் :

    கரூர் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6).

    இந்த மாணவன் அண்மையில் கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.

    இதனையடுத்து மாணவன் முகமதுபாரிசுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் தர்மலிங்கம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×