கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தற்கொலை

குடும்ப செலவுக்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு வந்ததாகவும் தெரிகிறது.மூர்த்தி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தற்கொலை
Published on

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியை அடுத்த விளங்காமுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது48). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப செலவுக்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடன் தொல்லையால் மனஅழுத்தத்துடன் காணப்பட்ட மூர்த்தி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த மூர்த்தியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com