என் மலர்
நீங்கள் தேடியது "விபத்தை ஏற்படுத்திய கார்"
- காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல், அங்கிருந்த 3 பைக்குகள் மீது மோதினர்.
- மேலும் காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர்.
ஓசூர்,
தமிழக எல்லையில் கார் ஒன்று 3 பைக்குகளை மோதிவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை ஓசூர் அருகே ஆனேக்கல் தாலுக்கா அத்திப்பள்ளி காவல் நிலையத்திற்குட்பட்ட பள்ளூர் கிராமத்தில், தமிழக எல்லையான சிப்காட்டில் இருந்து பள்ளூர் கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்த காரை, தமிழ்நாடு போலீசார் வழிமறித்தனர்.
ஆனால் காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல், அங்கிருந்த 3 பைக்குகள் மீது மோதினர். மேலும் காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பைக்கில் வந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பைக்குகள் முற்றிலும் சேதமானது. தமிழக போலீசார் ஏன் காரை துரத்தினர். காரில் இருந்தவர்கள் யார்? காரில் ஏதேனும் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






