என் மலர்
கிருஷ்ணகிரி
- நேற்று மீண்டும் இவருக்கும் இடையே தகராறு நடந்தது.
- இருதரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அன்பு, சசிகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள பேயனூர் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது57). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று மீண்டும் இவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்து இருதரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அன்பு, சசிகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 9 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
- கடந்த 26-ந் தேதி இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்,
பாகலூர் அருகே உள்ள மல்லசந்திரத்தைச் சேர்ந்தவர் நவீன்ரெட்டி (வயது 24). இவர் கனடா நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண் சமீபத்தில் நவீன்ரெட்டியுடன் உடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மன வருத்தத்தில் இருந்த நவீன்ரெட்டி கடந்த 21-ந் தேதி மல்லசந்திரத்தில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இங்கு வந்த இடத்தில் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 26-ந் தேதி இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன்ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாடு இழந்து ரோடு அருகே உள்ள சுவற்றில் மோதியது.
- அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாளமடுவு எனும் கிராமத்தில் வசித்து வருபவர் அகிலன் (வயது29). இவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அகிலன் நேற்று தனது சொந்த வேலையாக மலையாண்டஅள்ளி புதூர் சென்று விட்டு காவேரிப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மன்னன் நகர் எனும் இடத்தில் வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாடு இழந்து ரோடு அருகே உள்ள சுவற்றில் மோதியது.
இதில் தலையில் பலத்த அடிபட்டது. அவரை காவேரிப்பட்டணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக உடல் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது .
இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உறுப்பினர் சேர்க்கையை பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
- வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களை அ.தி.முகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று, சூளகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேரிகை, பி.குருபரப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையை, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களை அ.தி.முகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து ஒசூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட சூடாபுரம், பாகலூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதி நாகசந்திரம், தளி கொத்தனூர், பென்னங்கூர், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய எலசகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட துணைசெயலாளர் கே.மதன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு என்ற வெங்கடாசலம், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கி வினைபிரசாத் உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வினைபிரசாத். இவர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கி வினைபிரசாத் உயிரிழந்தார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம் வயது கருவுருதல் பற்றி வட்டார அளவில் ஆய்வு செய்ய வேண்டும்.
- எடை குறைவாக பிறந்த குழந்தைகளை தனிகவனம் கொண்டு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிப்பை கண்காணிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறை, தொழுநோய் தடுப்பு, காசநோய் தடுப்பு சார்பாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து வட்டார மருத்துவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய மக்கள், மலை கிராம மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங்களில் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், பல்வேறு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மகப்பேறு மரணங்களை அறவே தவிர்த்திட வேண்டும். பிறக்கிற அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் தடுப்பூசிகள் போட வேண்டும். பள்ளிச் சிறுவர்களுக்கு வழங்கப்படுகிற தடுப்பூசிகள் தவறாமல் வழங்க அனைத்து வட்டார மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்த 100 சதவீதம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்.
மேலும், இளம் வயது திருமணங்கள் முற்றிலும் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் வயது கருவுருதல் பற்றி வட்டார அளவில் ஆய்வு செய்ய வேண்டும். எடை குறைவாக பிறந்த குழந்தைகளை தனிகவனம் கொண்டு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிப்பை கண்காணிக்க வேண்டும். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், வட்டார மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டில் தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது45) இவருக்கு நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததாக தெரிகிறது.
- மனமுடைந்த யோகஸ்ரீ நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள தொடு தொட்டிகோலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் யோகஸ்ரீ (வயது16). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த யோகஸ்ரீ நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாட்ராம்பாளையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி சாலையில் வசித்து வருபவர் முருகன் (வயது 54). தங்கும் விடுதி உரிமையாளர். கடந்த 26-ந் தேதி இரவு இவர் தங்கும் விடுதி முன்பு இருந்த போது அங்கு வந்த ஒருவர் முருகனுடன் தகராறு செய்தார். இது குறித்து கேட்ட போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முருகனை மிரட்டியவர் பெயர் வெள்ளைசாமி (வயது 41), ஊத்தங்கரை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான வெள்ளைசாமி பிரபல ரவுடி ஆவார். ஊத்தங்கரை மற்றும் நாட்ராம்பாளையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள அவர் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரவு, பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது.
- ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை எஸ்ஆர்ஓ தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (வயது52).
இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறையே பூக்கும் பிரம்ம கமலம் செடி நட்டு வளர்த்து வருகிறார். இரவு, பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது. ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது. அதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
- 12.5 கிலோ எடையிலான ரசாயன மீன்களை பறிமுதல் செய்து குழி தோண்டி அதில் கொட்டி அழித்தனர்.
- கெட்டுப்போன மீன்களையோ விற்கக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.
ஓசூர்,
ஓசூர் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மீன் துறை உதவி இயக்குனர் மற்றும் மீன்வள சார் ஆய்வாளர் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று ஓசூர் மீன்வள சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ஓசூர் பகுதிகளில் உள்ள பல்வேறு மீன் கடைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது மீன் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல வகையான மீன்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் அந்த நீரை ஃபார்மலின் கிட் மூலம் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது ஃபார்மலின் ரசாயனம் கலந்து விற்பனை செய்ததாக 2 மீன் கடைகாரர்களை எச்சரித்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து 12.5 கிலோ எடையிலான ரசாயன மீன்களை பறிமுதல் செய்து குழி தோண்டி அதில் கொட்டி அழித்தனர்.
ஓசூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மீன் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் மீன் வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் ரசாயனம் கலந்த மீன்களையோ அல்லது கெட்டுப்போன மீன்களையோ விற்கக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.
- "ஜம்போ சர்க்கஸ்" என்ற சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
- இதில், மாநகராட்சி கவுன்சிலர் வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூரில், தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகே "ஜம்போ சர்க்கஸ்" என்ற சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக, ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி,சர்க்கஸ் நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார்.முன்னதாக ஜம்போ சர்க்கஸ் மேலாளர் பி.கே.ரித்தீஷ் வரவேற்றார்.
மேலும் இதில், மாநகராட்சி கவுன்சிலர் வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சர்க்கஸ் நிகழ்ச்சிகள், நாள்தோறும் மதியம் 1 மணி, 3 மணி மற்றும் இரவு 7 மணி ஆகிய 3 காட்சிகள் நடை பெறுவதாகவும், இதில் நாய்கள், குதிரைகள் மற்றும் எத்தியோப்பின், ஆப்பிரிக்கன் கலைஞர்கள் சாகசங்கள் நிகழ்த்து வதாகவும், சர்க்கஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






