

காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாளமடுவு எனும் கிராமத்தில் வசித்து வருபவர் அகிலன் (வயது29). இவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அகிலன் நேற்று தனது சொந்த வேலையாக மலையாண்டஅள்ளி புதூர் சென்று விட்டு காவேரிப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மன்னன் நகர் எனும் இடத்தில் வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாடு இழந்து ரோடு அருகே உள்ள சுவற்றில் மோதியது.
இதில் தலையில் பலத்த அடிபட்டது. அவரை காவேரிப்பட்டணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக உடல் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது .
இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.