என் மலர்
கிருஷ்ணகிரி
- ஜூன் 3-ந் தேதி வட சென்னையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம்.
- இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் பங்கேற்று, தீர்மான விளக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி வழங்குவது. நூற்றாண்டு விழாவினை கிழக்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது. முன்னாள் முதல்'அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதியன்று கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிளை கழகங்கள் முதல் அனைத்து அமைப்புகள் சார்பிலும் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, திமுக கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவது.
ஜூன் 3-ந் தேதி வட சென்னையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது. கிழக்கு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி ஊக்குவிப்பது.
ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, ஒன்றியத்தில் வெற்றி பெறும் அணிகளை கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குவது. ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளார்.
அந்த நிழ்ச்சியில் நடைபெறும் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், பரிதாநவாப், தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் நவாப் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று அந்த இரும்பு தகடுகள் காணாமல் போய்விட்டது.
- உடனே 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே வணங்கானபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (வயது32). கொத்தனார். இவர் சாத்தனூர் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிக்காக ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 8 இரும்பு தகடுகளை வாங்கி வைத்திருந்தார். சம்பவத்தன்று அந்த இரும்பு தகடுகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அவர் தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பின்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21), அருண் (23), மாது (19), சசிக்குமார் (22) ஆகியோர் இரும்புதகடுகளை திருடியது தெரியவந்தது. உடனே 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- சூர்யா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் முத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேசன். இவரது மகன் சூர்யா (வயது24). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி எற்பட்டு வந்தது. இதன்காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் போனாது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடாச்சாரி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சரஸ்வதியை தாக்கினார்.
- காயமடைந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சரஸ்வதி (வயது 38). ஓசூர் சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சாரி (41). தொழிலாளி. 2 பேர் குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடாச்சாரி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சரஸ்வதியை தாக்கினார். இதில் காயமடைந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடாச்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாதேஸ் மற்றும் அவரது உறவினர்கள் ஹரீஸ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து டாக்டர் கங்காதரை ஆபாசமாக திட்டி ஹெல்மெட்டால் தாக்கினார்.
- மாதேஸ் மற்றும் அவரது உறவினர் ஹரீஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே அக்ரஹாரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கங்கதார் (வயது28). டாக்டரான இவர் அதே பகுதியில் தனியார் கிளினீக் வைத்து நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் மாதேஸ் (31). இவருக்கும் அவரது சகோதாரர் சீனிவாசன் என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கங்கதார் மற்றும் கிராம மக்கள் இருதருப்பினரையும் சமதானம் செய்து வைத்தனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் மாதேஸ் மற்றும் அவரது உறவினர்கள் ஹரீஸ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து டாக்டர் கங்காதரை ஆபாசமாக திட்டி ஹெல்மெட்டால் தாக்கினார்.
இதுகுறித்து அவர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஸ் மற்றும் அவரது உறவினர் ஹரீஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- அறுந்து கிடந்த மின்வயரை தெரியாமல் தொட்டதால் திடீரென்று அதில் இருந்து அவர் மீது மின்சாரம் தாக்கியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பெரியபெலவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவி உள்ளார். வெங்கடேசன் நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்வயரை தெரியாமல் தொட்டதால் திடீரென்று அதில் இருந்து அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அருணா மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 26-ந் தேதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அகல்யா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வரை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி திவ்யா (வயது35). இவர் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 22-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு திவ்யா வெளியே சென்றார். ஆனால் மாலையில் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் நாகராஜ் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடிவருகின்றனர்.
இதேபோல் ஓசூரை அடுத்த பாரதிநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி அகல்யா (20). இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அகல்யா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது கணவர சந்திரசேகர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடிவருகின்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை மகுனூர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி ஆஷா (22). இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 27-ந் தேதி மீண்டும் இருவரும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆஷா திடீரென்று வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து ரஷீத் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஆஷாவை தேடிவருகின்றனர்.
- அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுக்கப்பட்டது.
- அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கானலட்டி கிராமத்தில் அன்னையப்பன் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 14 ஏக்கர் நிலப்பரபரப்பில் அமைந்துள்ளது.
கடந்த ஆட்சியில் தூர்வாருவதாக ஏரியை தேர்வு செய்து பின்பு கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு பருவ மழையில் ஏரி நிரம்பி தாறுமாறாக உடைப்பு எற்பட்டு விளை நிலங்கள் கோழிப்பண்ணைக்குள் மழை நீர்புகுந்தது.
பின்பு அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுக்கப்பட்டது. தற்போது சில நாட்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது.
அதனால் அப்பகுதியில் பல கிராம மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கிய ஏரியாக விளங்கி வருகிறது. தற்போது தூர் வாராமல் சிதலமடைந்து காணப்பட்டது. இதை சீரமைத்து தூர் வார அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் மனு அளித்து வருகின்றனர்.
இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- மாநாட்டிற்கு சூளகிரி வட்டக்கிளைத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
- இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு சூளகிரி வட்டக்கிளைத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வட்டச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள், ஜேம்ஸ் , டென்சிங், மூகிலன், தினேஷ், ஜெகதாம்பிகா, சியாமலா மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- இன்று அதிகாலையில் அந்த யானை காமன்தொட்டி, தாசன்புரம் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது.
- ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சானமாவு வனபகுதியில் இரண்டு மாதங்களாக சுற்றி திரிந்த ஒற்றை ஆண் யானை தற்போது இன்று அதிகாலையில் காமன்தொட்டி, தாசன்புரம் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது.
இந்த யானை ஊருக்குள் நுழையாமல் வனப்பகுதி ஒட்டி விளை நிலங்களில் பயிர்களை சாப்பிட்டு விட்டு மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு தஞ்சம் அடைகிறது.
இந்த ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் புளியரசி, செட்டி பள்ளி, சக்காரலு, கடத் துர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தேவையின்றி வன பகுதிகளுக்கு விறகு வெட்ட, ஆடு, மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம். யானையை நேரில் பார்த்தால் வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிய விட வேண்டும். யானையை விரட்டு வகையில் நெருப்புகளையும், வெடி சத்தம் முழக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.
- வீட்டில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
- மனமுடைந்து காணப்பட்ட மல்லேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள எக்கூர் பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட மல்லேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு சிம்ம வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன.
- இரவு ஆஞ்சநேயர் வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில், 37-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி ஜூன் 8-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி கடந்த 26-ந் மாலை மிருத்சங்கரஹணம்,
அங்குராற்பணம் ஆகியவை நடந்தன. 27-ந் தேதி காலை கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், பிரகார உற்சவம், இரவு அன்னபட்சி வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு அபிஷேகம், பிரகார உற்சவமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு சிம்ம வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன.
தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவு ஆஞ்சநேயர் வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடக்கிறது. தொடர்ந்து அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவில் சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. வரும் 31-ந் தேதி பகல் 10.30 மணிக்கு நரசிம்மருக்கு திருக்கல்யாணமும், 11.30 மணிக்கு மாங்கல்யதாரணமும், அன்னதானமும், இரவு கருட வாகனத்தில் நகர் வலமும் நடக்கிறது.






