search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழா: மூத்த முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு பொற்கிழி
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழா: மூத்த முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு பொற்கிழி

    • ஜூன் 3-ந் தேதி வட சென்னையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம்.
    • இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் பங்கேற்று, தீர்மான விளக்கவுரையாற்றினார்.

    கூட்டத்தில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி வழங்குவது. நூற்றாண்டு விழாவினை கிழக்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது. முன்னாள் முதல்'அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதியன்று கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிளை கழகங்கள் முதல் அனைத்து அமைப்புகள் சார்பிலும் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, திமுக கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவது.

    ஜூன் 3-ந் தேதி வட சென்னையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது. கிழக்கு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி ஊக்குவிப்பது.

    ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, ஒன்றியத்தில் வெற்றி பெறும் அணிகளை கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குவது. ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளார்.

    அந்த நிழ்ச்சியில் நடைபெறும் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், பரிதாநவாப், தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் நவாப் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×