மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி சாவு

அறுந்து கிடந்த மின்வயரை தெரியாமல் தொட்டதால் திடீரென்று அதில் இருந்து அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பெரியபெலவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவி உள்ளார். வெங்கடேசன் நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்வயரை தெரியாமல் தொட்டதால் திடீரென்று அதில் இருந்து அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அருணா மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com