என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சியில் குப்பைகள் ஒழிப்பு பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.
    • சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுக்காகவும் இப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படுகிறது என நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சியில் குப்பைகள் ஒழிப்பு பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளையும் பிரித்து, உரம் தயாரிப்பு, மக்கா குப்பைகளை தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணியும் நடக்கிறது. குப்பை கிடங்கில் மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்காகவும், சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுக்காகவும் இப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படுகிறது என நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார்.

    இதில் நகராட்சி பொறியாளர் சேகரன், துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், மாதேஸ்வரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், களப்பணி உதவியாளர், மற்றும் தூய்மை பாரத இயக்க பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு புளியந்தோப்பில் 25 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
    • கைதான அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனம் மற்றும் 18,500 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக டி.எஸ்.பி. பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வடுகனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு புளியந்தோப்பில் 25 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதில் பலரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம், குழிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது31), செவ்வாரப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூரை சேர்ந்த பரமசிவம், சாமல்பட்டி அருகேயுள்ள பரசனூரை சேர்ந்த வீரசோர், மத்தூர் அடுத்துள்ள கமலாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், திருப்பத்தூர் மாவட்டம், இளவம்பட்டியை சேர்ந்த திருஞானம், மத்தூர் அருகேயுள்ள மணிகண்டன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனம் மற்றும் 18,500 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனம் எதிர்பாராத விதமாக மணிகுமார் மீது மோதியது.
    • மணிகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகுமார் (வயது 32). கூலி தொழிலாளி.இவர் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனம் எதிர்பாராத விதமாக மணிகுமார் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த மணிகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 404 கனஅடி இருந்தது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாகும். அணையில் இருந்து வினாடிக்கு 12 கனஅடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இது குறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.65 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் 50.50 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்க முடிவு செய்து, விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    மேலும், எதிர்வரும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து, கிருஷ்ணகிரி அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு இருக்கும். எனவே, வழக்கமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், பென்னேஸ்வரமடம், நெடுங்கல், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
    • விவசாயிகள் , பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் விவசாயிகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளைநில பகுகளில் 5-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு ஆர்பாட்டங்கள் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் விவசாயிகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாய உபகரணங்கள் கலப்பை மற்றும் விவசாய உபகரணங்கள் கருப்பு கொடி பறக்க விட்டு 154-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.

    • தங்கள் நிலங்களை வருவாய்த்துறையினர் அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள்.
    • போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 110 ஆண்கள், 39 பெண்கள் உட்பட, 149 பேரை கைது செய்தனர்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி ஊராட்சிக்கு உட்பட்ட மரிக்கம்பள்ளி கிராமத்தில், 30 பேருக்கு பிரித்து வழங்குவதற்காக, 1.25 ஏக்கர் நிலம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கடந்த, 1984-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இது பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.

    இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்கள், தங்களுக்கு அந்த நிலத்தை திரும்ப தரும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் ஆதிதிராவிடத்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட நிலங்களை பயனாளிகளுக்கு பிரித்து தருமாறு கோரி மரிக்கம்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் மாதேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் ஆகியோர் தலைமையில், ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு, 38 ஆண்டுகள் ஆன நிலையிலும், தங்கள் நிலங்களை வருவாய்த்துறையினர் அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    தனி தாசில்தார், மற்றும் வருவாய் துறை அலுவலர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது போலீசாரை மீறி சம்பந்தப்பட்ட நிலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செல்ல முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 110 ஆண்கள், 39 பெண்கள் உட்பட, 149 போரை கைது செய்தனர்.

    • கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட தாலுகா போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. அப்போது விசாரணை செய்ததில் பவானி அருகே உள்ள சொக்காரம்மன் நகரை சேர்ந்த வின்சன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தி சென்ற குட்கா பொருள் மற்றும் காரின் மதிப்பு ரூ.3,68,104 ஆகும். 

    • பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பார்த்து வந்தும் குணமாகவில்லை.
    • சம்பவத்தன்று மனவேதனையில் இருந்த இந்திரா ஜானி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டம், கக்குடா கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா ஜானி (வயது17). இவர் பெங்களூர், ஆனேக்கல் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பார்த்து வந்தும் குணமாகவில்லை.

    சம்பவத்தன்று மனவேதனையில் இருந்த இந்திரா ஜானி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு செய்து கொண்டார்.

    இது குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீண்ட நாட்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
    • மஞ்சுநாத் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெலகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று இதனால் மனவேதனையில் இருந்த மஞ்சுநாத் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மஞ்சுநாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவர் பின்னால் 17 வயது மகன், பருக் ஆகிய 2 பேர் துரத்தி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
    • இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி அருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது 32). கூலி தொழிலாளி. அதேபோல் காட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தர் அப்துல் மாலிக். இவருடைய மகன்கள் 17 வயது மகன், பருக் (20). இரு குடும்பத்தி னரிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று செல்வம் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் 17 வயது மகன், பருக் ஆகிய 2 பேர் துரத்தி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்நிலையில் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பருக், சாத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சாத்து கொடுத்த புகாரின் பேரில் செல்வம் (32), மாது (50), நிர்மல் ஸ்ரீ (21) ஆகியோரை கைது செய்து செய்தனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • காவேரி கூக்குரல் ஆகிய அமைப்புகளின் சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.
    • முன்னதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் வரவேற்றார்.

    ஓசூர்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் காப்போம் மற்றும் ஈஷா காவேரி கூக்குரல் ஆகிய அமைப்புகளின் சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.

    ஓசூர் அதியமான் பொறியியற் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா சிறப்பு விருத்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கிவைத்தார். மேலும், இதில் சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கே.ஏ.மனோகரன், அதியமான் பொறியியற் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவில் பேசினர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தொல்லியல் கண்காட்சியையும் சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

    முன்னதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் வரவேற்றார். இதில், கனிம வளத்துறை உதவி இயக்குனர் வேடியப்பன், வக்கீல் ஆனந்தகுமார்,ரோட்டரி கவர்னர் ராகவன்,தொழிலதிபர்கள், குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி, மாவட்டம் முழுவதும் 2, 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • இ-வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது.
    • முடிவில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கபட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி கோட்டத்தின் மின் பகிர்மான அலுவலங்கள் சார்பில், கிருஷ்ணகிரியில் இ-வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மின்வாரிய உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இ-வாகனத்தின் முக்கியத்துவம் குறித்தும், இ வாகனத்தின் பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பேசினார்கள். முடிவில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கபட்டது.

    இதில் செயற்பொறியாளர் வேல், கிருஷ்ணகிரி கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பவுன்ராஜ், போச்சம்பள்ளி கோட்ட செயற்பொறியாளர் இந்திரா மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

    ×