search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    கிருஷ்ணகிரி அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 404 கனஅடி இருந்தது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாகும். அணையில் இருந்து வினாடிக்கு 12 கனஅடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இது குறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.65 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் 50.50 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்க முடிவு செய்து, விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    மேலும், எதிர்வரும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து, கிருஷ்ணகிரி அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு இருக்கும். எனவே, வழக்கமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், பென்னேஸ்வரமடம், நெடுங்கல், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×