என் மலர்
கிருஷ்ணகிரி
- அருண் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
- வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அருண் (20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அருண் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
அந்த பெண் அருணின் காதலை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அருண் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை குமரவேல் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முனுசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
- பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே சிக்கபூவதி பகுதியைச் சேர்ந்த முனுசாமி (வயது80). இவர் நேற்று காமன்தொட்டி அருகே உள்ள ஒரு ஓட்டல் அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முனுசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் முத்து சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 8-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த ராஜா அருகில் மரக்கட்டையை எடுத்து தனது மனைவியின் காலில் தாக்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளுக்குறுக்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது29). இவர் தனியார் நிறுவனத்தில் வேைல பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (26). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ராஜா அருகில் மரக்கட்டையை எடுத்து தனது மனைவியின் காலில் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரோஜா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
- அங்கு வந்த சங்கருக்கும், கோவிந்தனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த சங்கர் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து கோவிந்தன் வயிற்று பகுதியில் தாக்கியுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கதவணைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது40). விவசாயி. அதேபகுதியைச் சேர்ந்த சங்கர் (55). உறவினர்களான இருவருக்கும் விவசாயம் செய்வதற்கு ஒரு கிணற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கோவிந்தன் தனது நிலத்தில் இருந்த தென்னை மட்டைகளை அகற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கருக்கும், கோவிந்தனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சங்கர் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து கோவிந்தன் வயிற்று பகுதியில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கோவிந்தனை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோவிந்தன் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
- இது குறித்து நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
- தமிழக போலீசுக்கே தெரியாமல் ஆந்திர போலீஸ் இங்கு வந்து குறவரின மக்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளது.
கிருஷ்ணகிரி,
தமிழ் பழங்குடி குறவன் சங்க மாநில தலைவர் ரமேஷ் தலைமையில், 15-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
தொடர்ந்து தமிழ் பழங்குடி குறவன் சங்க மாநில பொது செயலாளர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியாண்டபட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணம்மாள் (65), அருணா (30), சத்யா (45), பூமதி (24) ஆகிய 4 பெண்கள், அய்யப்பன் (45), ரமேஷ் (50) ஆகிய 2 ஆண்கள், மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய 7 பேரையும் ஆந்திர மாநில சித்தூர் கிரைம் பிரிவு போலீசார் கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகளில் பொய் வழக்கில் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
அவர்களின் நிலை என்ன என்பது கூட தெரியவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் பழங்குடி குறவன் சங்கம் மூலம் மத்தூர் போலீசில் புகாரளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து விசாரிக்குமாறு போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் பயனில்லை.
கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற குறவர் இன மக்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் உள்ள சித்தூர் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறவர் இனத்தை தொடர்ந்து கேவலமாக பேசுவதாலும், பொய் வழக்கு போடுவதாலும் எங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.
ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அடுத்த எலச்சூரை சேர்ந்த மணிமேகலை என்ற பெண் கடந்த, 2003-ல் போலீசாரின் கெடுபிடியால் தற்கொலை செய்து கொண்டார்.
அதே பகுதியை சேர்ந்த சங்கர், 2020-ல் போலீஸ் கெடுபிடியால் தற்கொலை செய்து கொண்டார். ஊத்தங்கரை அடுத்த முதுகலை பட்டதாரி ராஜ்குமார் மீது கடந்த, 2021-ல் பொய் வழக்கு போட்டனர். இது குறித்து நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
தற்போது தமிழக போலீசுக்கே தெரியாமல் ஆந்திர போலீஸ் இங்கு வந்து குறவரின மக்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் என கூறப்படுகிறது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சபரி வேலன் மற்றும் போலீசார், ஓசூர் அருகே குமுதே பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ஜெய்ஸ்வால் (28) என்பவர் விற்பனைக்காக பெங்களூரிலிருந்து சேலத்திற்கு காரில் குட்காவை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் என கூறப்படுகிறது. குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து, தீபக் ஜெய்ஸ்வாலையும் கைது செய்தனர். மேலும், காரின் மதிப்பு 10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
- கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 1027 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
- 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 2-ந் தேதி தொடங்கி நிறைவடைந்தது.
இதில், கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 1027 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
பெரும்பாலான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது. நிறைவு நாளான நேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் தலைமை தாங்கினார். இதில், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை உதவித்தொகை 100 பேருக்கும், இயற்கை மரண உதவித்தொகை 30 பேருக்கும், இலவச வீட்டு மனை பட்டா 3 பேருக்கு என ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், உட்பிரிவு பட்டா மாற்ற் 51 பேருக்கும், குடும்ப அட்டை 25 பேருக்கும், பட்டா மாற்றம் 16 பேருக்கும் என மொத்தம் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விஜி, குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் திடீரென்று தவறி விழுந்தது.
- குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பசுவராஜ். இவருக்கு 3 வயதில் உமாபதி என்ற மகனும் உள்ளது. இந்த குழந்தை வீட்டின் அருகே சம்பவத்தன்று விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் திடீரென்று தவறி விழுந்தது. இதில் குழந்தை நீரில் மூழ்கி பரிதபாமாக இறந்தது.
இதுகுறித்து பசுவராஜ் சூளகிரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் முழுநேரப் பள்ளியாகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து இசைப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், கிருஷ்ணகிரியில் மாவட்ட அரச இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் முழுநேரப் பள்ளியாகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தப்பட்டு, அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும்.
மாணவ, மாணவியர்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச் சலுகை உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இப்பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், திருமலை நகர் ராமாபுரம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேம்பால விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
- 22-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
கிருஷ்ணகிரி
காரகுப்பம் பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பால விரிவாக்க பணிக்காக, பர்கூர் ஒன்றியத்தில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் 3 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் சி.சிவமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி திட்ட பராமரிப்பு கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒப்பதவாடி, சிகரலப்பள்ளி, குட்டூர், பட்லபள்ளி, மகாதேவகொல்லஹள்ளி, பாலேதோட்டம், பண்டசீமானூர், ஜிங்கல்கதிரம்பட்டி, காட்டாகரம், கொண்டப்பநாயனபள்ளி, குள்ளம்பட்டி, பேராண்டபள்ளி, போச்சம்பள்ளி, பெருகோபனபள்ளி, புளியம்பட்டி, தாதம்பட்டி, தொகரபள்ளி, வலசகவுண்டனூர் மற்றும் வெப்பாலம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது காரகுப்பம் பிரிவு சாலை அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மேம்பால விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
எனவே அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் இம்மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொண்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேரலட்டி முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
- பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
தளி போலீசார் நேரலட்டி முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சாரண்டப்பள்ளி சேகர் (28), நேரலட்டி மாதேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதேபோல தேன்கனிக்கோட்டை போலீசார் அன்னசாகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ரகு (35), சதீஷ்குமார் (23), நரசிம்மன் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- 164 தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது
- கே.என்தொட்டி மேல் தெரு ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
பேரிகை போலீசார் மாஸ்தி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு கங்கம்மாள் கோவில் அருகில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 164 தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன் மதிப்பு ரூ.10 ஆயிரத்து 780 ஆகும். அதை வைத்திருநத கே.என்தொட்டி மேல் தெரு ஜெயராமன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.






