search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
    X

    அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

    • பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் முழுநேரப் பள்ளியாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து இசைப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், கிருஷ்ணகிரியில் மாவட்ட அரச இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் முழுநேரப் பள்ளியாகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தப்பட்டு, அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும்.

    மாணவ, மாணவியர்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச் சலுகை உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், திருமலை நகர் ராமாபுரம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×