என் மலர்
கிருஷ்ணகிரி
- தங்களது புகார்களை தபால் உறையின் மீது எழுதி வருகிற 23ம் தேதிக்குள் சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கோட்ட அளவிலான தபால்துறை சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற 30-ம் தேதி நடக்கிறது. இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்ைகையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான தபால்துறை சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
அஞ்சலக வாடிக்கை யாளர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது புகார்களை தபால் உறையின் மீது எழுதி வருகிற 23ம் தேதிக்குள் சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நீங்கள்அனுப்பும் புகார்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.
பதிவு தபால், எம்.ஓ., வி.பி., இன்சூர்டு தபால் மற்றும் விரைவு தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விபரம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
- இணைதளத்தில் பதிவுச் செய்யாத மாணவ, மாணவிகளும் கல்லூரியில் நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) முதல் நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இணைதளத்தில் பதிவுச் செய்யாத மாணவ, மாணவிகளும் கல்லூரியில் நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மாணவ, மாணவிகளில் இவ்வாண்டு நீட் தேர்வினை 481 பேர் எழுதினர்.
- தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 235 பேர் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற
மாணவ, மாணவிகளில் இவ்வாண்டு நீட் தேர்வினை 481 பேர் எழுதினர். அதில் 235 மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் மாதவன் 720 மதிப்பெண்களுக்கு 536 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், காளிங்காவரம் மாணவி கல்பனா 462 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், யு.மிட்டப்பள்ளி மாணவர் விழிவர்மா 442 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், நெடுங்கல் மாணவர் சபரி 425 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துமதி 376 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதே போல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டி, காவேரிப்பட்டணம், மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர், ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சேர்க்கைக்கான உள் ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் அதிக அளவிலான மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றவராகின்றனர். தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.
- விண்ணப்பதாரர்கள் வருகிற 30ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்
- கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம், நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் தொடங்க விருப்ப முள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனை வோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 540 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம், இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயப்படுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் வருகிற 30ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம், நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்ப தாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச் சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.
மேலும், அருகிலுள்ள இ-சேவை மைங்களின் தகவல்களை முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்தி காணலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இதுபோன்றே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்து குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கூடாது என எச்சரிக்கை ஊர் கவுண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மாரண்டப்பள்ளி கிராமத்தில், ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெறும் கட்டபஞ்சாயத்து சம்பவத்தில் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைப்பு, சமூக நீதி மறுப்பு மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை கண்டித்தும், ஓசூரில் சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி ஒருங்கி ணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார்.
இதில், சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனரும், பொதுச் செயலா ளருமான க. மா, இளவரசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மாநில பொருளாளர் முத்துசாமி,மாநில இளைஞர் அணி தலைவர் ஜெகதீஷ், வக்கீல் சண்முகம், இந்திய ஐக்கிய பொதுவுடமை கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் சுந்தரம், செல்வம், சரோஜம்மா உள்பட பலர் பேசினர்.
பின்னர், ஊர் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணி கோவிந்தன் என்ற பெண், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக மாரண்டபள்ளி கிராமத்தில் வசித்து வந்தோம் கணவர் மறைவுக்கு பிறகு, எனது குழந்தைகளின் மேல் படிப்பிற்காக பெங்களூருக்கு சென்று குடியேறினேன்.
பின்னர் எனது சொந்த ஊரான இந்த கிராமத்திற்கு வந்த போது, நான் இந்த ஊரில் பிறக்கவில்லை என்று கூறி ஊர் கவுண்டர் தலைமையில் என்னை தள்ளி வைப்பதுடன், எங்கள் உறவினர்களிடமும் பேசக்கூடாது என கூறி ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒதுக்கி வைத்துள்ளனர்.
மேலும் எங்கள் குடும்பத்தில் உள்ள சில பிரச்சனைகளை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பிரச்சினை செய்து வருகின்றனர். மேலும்,, எனக்கு ஆதரவு தெரிவிக்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இதுபோன்றே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்து கடைகளில் பொருட்கள் வாங்கவோ அல்லது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கூடாது என எச்சரிக்கை ஊர் கவுண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக பலமுறை காவல் நிலையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் முதலமைச்சர் குறை தீர்க்கும் பிரிவுக்கும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த கட்டபஞ்சாயத்தால் தற்போது 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தபட்ட ஊர்கவுண்டர் மற்றும் அவருக்கு உறுதுணையாக செயல்படும் நபர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- பேரணியின் போது புதியதாக சேர்ந்த 18 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த எண்ணேகொள்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள், நேரு யுவகேந்திரா அமைப்பு, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மாணவர் சேர்க்கை பேரணியை நடத்தினர்.
இந்த பேரணிக்கு எண்ணேகொள்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை செந்தில்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுரி சந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியின் போது புதியதாக சேர்ந்த 18 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஏற்கனவே 143 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் பள்ளியாக உள்ளது.
இந்நிகழ்ச்சியினை யொட்டி அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
- திடீரென மாடி வீட்டின் கீழ், பின்பகுதியில் தீப்பிடித்துள்ளது.
- தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயன், ராஜா தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே மத்திகிரியில், போலீஸ் நிலையம் பின்புறமுள்ள நேதாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வேலன் (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர், நேற்று மாலை, தனது மனைவியுடன் காரில் பெங்களூரில் ஒரு திருமண விழாவிற்கு சென்றார். வீட்டில் அவரது மகள் சரண்யா என்பவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது திடீரென மாடி வீட்டின் கீழ், பின்பகுதியில் தீப்பிடித்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரண்யா உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறி, தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயன், ராஜா தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் ரொக்கப்பணம், தங்க நகைகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- வாகனத்தை சோதனையிட்ட போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 1/2 குட்கா இருப்பது தெரியவந்தது.
- இதன் மதிப்பு 34 லட்சம் ரூபாய் என தெரியவந்தது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மசமுத்திரம் அருகே நேற்று காவேரிப்பட்டணம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், பழனியப்பன், சரவணன், குமரேசன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு சந்தேகத்திடமான முறையில் வந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 1/2 குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 34 லட்சம் ரூபாய் என தெரியவந்தது.
உடனடியாக காவேரிப்பட்டணம் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த ஸ்ரீவள்ளூர் ஊரை சார்ந்த கணேஷை கைது செய்தனர்.
விசாரித்தபோது குட்காவை பெங்களூரில் இருந்து கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
- அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- ஆனஸ்ட்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது43). இவரது மகன் ஆனட்ஸ்ராஜ் (20). இவரது நண்பர் கோவையைச் சேர்ந்த பிரசாத் (20). சம்பவத்தன்று ஆனஸ்ட்ராஜூம், பிரசாத்தும் மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை அருகே சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ஆனஸ்ட்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த உடன் சென்ற பிரசாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தனசேகரன் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் தனியாக இருக்கும்போது ஜெய்பிரகாஷ் எதற்காக அடிக்கடி வந்து செல்கிறார் என்று தட்டிகேட்டதாக தெரிகிறது.
- ஆத்திரமடைந்த ஜெய்பிரகாஷ், லட்சுமி, அவரது மகன் வஜ்ரவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குமாரை தாக்கியுள்ளனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது41). விவசாயி. அதேபகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு வஜ்ரவேல் (18) என்ற மகன் உள்ளார்.
பெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் லட்சுமி வீட்டிற்கு தொட்டதிம்மன அள்ளியைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்பவர் அடிக்கடி வந்து செல்வார். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து லட்சுமியிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது ஜெய்பிரகாஷ் எதற்காக அடிக்கடி வந்து செல்கிறார் என்று தட்டிகேட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெய்பிரகாஷ், லட்சுமி, அவரது மகன் வஜ்ரவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குமாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த குமார் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குமார் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்பிரகாஷ், லட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோன்று லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் குமார், அரசு, ரவிக்குமார், போஸ், மணிகண்டன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக ஒரு லாரிைய மடக்கிபிடித்து விசாரித்ததில் 20 டன் கிரானைட் கற்கள் அனுமதியின்றி கடத்தியதாக தெரியவந்தது.
- போலீசார் லாரியின் உரிமையாளர், டிரைவர் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி பொன்னுமணி மற்றும் பர்கூர் போலீசார் அதே பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு லாரிைய மடக்கிபிடித்து விசாரித்ததில் 20 டன் கிரானைட் கற்கள் அனுமதியின்றி கடத்தியதாக தெரியவந்தது.
உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து ரூ.1லட்சத்து20 மதிப்புள்ள கிரானைட் கற்களையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பர்கூர் போலீசார் லாரியின் உரிமையாளர், டிரைவர் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
- தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது.
- சிறுவன், சுதாகர் (23) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகி மாவட்டம், சூளகிரி தாலுகா பேரிகை காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இது ெதாடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து பேரிகை போலீசார் நேற்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட சூளகிரி அருகே குருபராத்தப்பள்ளியை சேர்ந்த ஆனஸ்ராஜ் (வயது20), ஒசூர் ராம்நகர் சேர்ந்த உமாசங்கர் (21), சூளகிரி பார்த்திபன் (21), சீபம் பகுதியை சேர்ந்த திலிப் (26), 17 வயது சிறுவன், சுதாகர் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 5 பேர் ஓசூர் சிறையிலும், 17 வயது சிறுவனை சேலம் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.






