search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 235 பேர் தேர்ச்சி
    X

    கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 235 பேர் தேர்ச்சி

    • மாணவ, மாணவிகளில் இவ்வாண்டு நீட் தேர்வினை 481 பேர் எழுதினர்.
    • தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 235 பேர் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற

    மாணவ, மாணவிகளில் இவ்வாண்டு நீட் தேர்வினை 481 பேர் எழுதினர். அதில் 235 மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் மாதவன் 720 மதிப்பெண்களுக்கு 536 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், காளிங்காவரம் மாணவி கல்பனா 462 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், யு.மிட்டப்பள்ளி மாணவர் விழிவர்மா 442 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், நெடுங்கல் மாணவர் சபரி 425 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துமதி 376 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டி, காவேரிப்பட்டணம், மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர், ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

    அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சேர்க்கைக்கான உள் ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் அதிக அளவிலான மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றவராகின்றனர். தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×