என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயியை இரும்பு கம்பியால் தாக்கிய பெண் உள்பட 2 பேர் கைது
- வீட்டில் தனியாக இருக்கும்போது ஜெய்பிரகாஷ் எதற்காக அடிக்கடி வந்து செல்கிறார் என்று தட்டிகேட்டதாக தெரிகிறது.
- ஆத்திரமடைந்த ஜெய்பிரகாஷ், லட்சுமி, அவரது மகன் வஜ்ரவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குமாரை தாக்கியுள்ளனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது41). விவசாயி. அதேபகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு வஜ்ரவேல் (18) என்ற மகன் உள்ளார்.
பெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் லட்சுமி வீட்டிற்கு தொட்டதிம்மன அள்ளியைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்பவர் அடிக்கடி வந்து செல்வார். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து லட்சுமியிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது ஜெய்பிரகாஷ் எதற்காக அடிக்கடி வந்து செல்கிறார் என்று தட்டிகேட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெய்பிரகாஷ், லட்சுமி, அவரது மகன் வஜ்ரவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குமாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த குமார் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குமார் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்பிரகாஷ், லட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோன்று லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் குமார், அரசு, ரவிக்குமார், போஸ், மணிகண்டன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






