என் மலர்
நீங்கள் தேடியது "சேர்க்கை பேரணி"
- பேரணியின் போது புதியதாக சேர்ந்த 18 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த எண்ணேகொள்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள், நேரு யுவகேந்திரா அமைப்பு, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மாணவர் சேர்க்கை பேரணியை நடத்தினர்.
இந்த பேரணிக்கு எண்ணேகொள்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை செந்தில்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுரி சந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியின் போது புதியதாக சேர்ந்த 18 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஏற்கனவே 143 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் பள்ளியாக உள்ளது.
இந்நிகழ்ச்சியினை யொட்டி அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.






