என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண்வெட்டியால் விவசாயியை தாக்கிய உறவினர் கைது
- அங்கு வந்த சங்கருக்கும், கோவிந்தனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த சங்கர் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து கோவிந்தன் வயிற்று பகுதியில் தாக்கியுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கதவணைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது40). விவசாயி. அதேபகுதியைச் சேர்ந்த சங்கர் (55). உறவினர்களான இருவருக்கும் விவசாயம் செய்வதற்கு ஒரு கிணற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கோவிந்தன் தனது நிலத்தில் இருந்த தென்னை மட்டைகளை அகற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கருக்கும், கோவிந்தனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சங்கர் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து கோவிந்தன் வயிற்று பகுதியில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கோவிந்தனை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோவிந்தன் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.






