என் மலர்
கிருஷ்ணகிரி
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
- இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் தேவராஜை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்காண்டபள்ளி அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65).
இவர் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் தேவராஜை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மகன் ரவி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தேவராஜை தேடி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குட்டியப்பா நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது28). தொழிலாளி. இவர் நேற்று ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சீதாராம் மேடு பகுதி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கண்டகனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (28). ஜே.சி.பி. ஆப்ரேட்டரான இவர் தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் தனது புல்லட் வண்டியில் நேற்று சென்றார். அப்போது அவர் அங்குள்ள வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் சிவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (27). கால்நடை வியாபாரியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த பிக்அப் வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- வெங்கடாசலம் (வயது56), அவரது மனைவி ஆகிய 2 பேரும் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே அந்த பகுதியில் சோதனை செய்ததில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது56), அவரது மனைவி ஆகிய 2 பேரும் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. உடனே கணவன்-மனைவி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் அனுமதி யின்றி பேனர் வைத்திருப்பது தெரிய வந்தது.
- அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் காமராஜ் நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் அனுமதியின்றி பேனர் வைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், சின்ன எலத்தகிரியை சேர்ந்த பிரேம்குமார் (வயது29), முரளி (24) ஆகிய 2பேர் பேனர் வைத்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- ராம் நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், ஆஞ்சியின் செல்போனை திருடி தப்பி ஓடினார்.
- அந்த சிறுவனை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலை ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சி (வயது28).
இவர் சம்பவத்தன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மாரியம்மன் கோவில் அருகே ராம் நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், ஆஞ்சியின் செல்போனை திருடி தப்பி ஓடினார்.
உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் கட்டண சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
- ரூ.149 கோடியே 86 இலட்சம் மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் கோவிந்தராவ் கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் கிருஷ்ணகிரி நகராட்சி குப்பைமேட்டு தெருவில் உள்ள நகர்புற நல வாழ்வு மையம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், ஜெகதேவியில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம், பர்கூர் அரசு மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு உடன் சென்றார்.
ஜெகதேவி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாமை பார்வையிட்டு, காப்பீடு அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை குறித்து நேரடியாக ஆய்வு செய்து, 10 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் காப்பீடு அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து, பர்கூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து இயக்குனர் கோவிந்தராவ் கூறியதாவது:-
சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் வகையிலும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவை குறைப்பதற்கும், முதல்- அமைச்சரால் 18.12.2021 அன்று தொடங்கப்பட்ட திட்டம் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும்-48 திட்டம்.
இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
இத்திட்டத்தில் 237 அரசு மருத்துவமனைகள், 451 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 688 மருத்துவமனைகள் மருத்துவ சிகிச்சைகள் வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்கள், வேற்று நாட்டவர்கள் என அனைவருக்கும் தமிழ்நாடு எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் கட்டண சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30.06.2023 வரை அரசு மருத்துவமனைகளில் 1,52,833 நபர்களும் தனியார் மருத்துவமனையில் 15,314 நபர்கள் என மொத்தம் 1,70,231 நபர்களுக்கு ரூ.149 கோடியே 86 இலட்சம் மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அலுவலர் சையத் அலி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் சந்திரசேகர், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாத்வீகா, மருத்துவர் மீனாட்சி, தாசில்தார் சம்பத், ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் சரவணன் மற்றும் சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
- ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனை கையாள முனைவதால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பர்மிட் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
- தமிழகத்திற்குள் நுழைய முடியாமல், பல வாகனங்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கே திரும்பிச் செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் உள்ள அலுவலகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள், நேரிடையாக பணம் செலுத்தி பர்மிட் பெறும் முறையை ரத்து செய்துவிட்டதாகவும், ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்தி பர்மிட் பெற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அறியாமல், கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் கார்கள், லாரிகள், டூரிஸ்ட் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள், உரிமையாளர்கள், கால் கடுக்க பல மணிநேரம் சோதனைச்சாவடி அலுவலகத்தில் வரிசையில் காத்து நின்று ஏமாற்றமடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சோதனைச்சாவடியிலேயே ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி, பர்மிட் பெறும் வசதி செய்யப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனை கையாள முனைவதால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பர்மிட் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
இது தவிர, பெரும்பாலான லாரி டிரைவர்களுக்கு, செல்போனில் ஆன்லைன் முறையை கையாள்வது தெரியாத காரணத்தால் அவர்கள் தடுமாறி நிற்கும் சூழ்நிலையும் உள்ளது.
இவ்வாறு ஆன்லைனிலும் பர்மிட் பெற முடியாமலும், நேரிடையாகவும் பர்மிட் பெற முடியாமலும் இக்கட்டான நிலை ஏற்பட்டு, தமிழகத்திற்குள் நுழைய முடியாமல், பல வாகனங்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கே திரும்பிச் செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.
எனவே, ஆன்லைன் வசதி மட்டுமின்றி, நேரிடையாக பணம் செலுத்தி எளிதில் பர்மிட் பெறும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் டூரிஸ்ட் வாகனங்களை இயக்குபவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விசாரணையில் அவரது பெயர் மகேஷ் (29), குருபராத்பள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- அதில் அவர் 110 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குருபராத்பள்ளி அருகில் சூளகிரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை சோதனை செய்த போது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவரது பெயர் மகேஷ் (29), குருபராத்பள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் மது வலக்கு அமல் பிரிவு போலீசார் அஞ்செட்டி அருகே கொடகரை பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த வாலிபரை சோதனை செய்தனர். அதில் அவர் 110 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவரது பெயர் முகமது பிலால (21), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் லாட்டரி விற்ற சிங்காரப்பேட்டை செந்தில்குமார் (45), குருபராத்பள்ளி முனுசாமி (70), கெலமங்கலம் முருகேஷ் (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா என பேலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் குட்கா விற்பனை செய்த வி.மாதேப்பள்ளி மூர்த்தி (38), இட்டிக்கல் அக்ரஹாரம் இளவரசன் (35), அட்டகுறுக்கி லோகேஷ் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி நோக்கி சென்ற மினி டெம்போ எதிர்பாராத விதமாக பெரியசாமி மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகில் உள்ள மந்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது27). தேங்காய் வியாபாரியான இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு சந்தேஷ் (8) என்ற மகனும், பாரதி (6), யாதினி என்ற மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு வந்த பெரியசாமி வியாபாரத்தை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்தங்கரையில் இருந்து மத்தூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்ற மினி டெம்போ எதிர்பாராத விதமாக பெரியசாமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- வாக்குரிமையைப் பயன்படுத்தி, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேப் பொதுப்பள்ளியில் மாணவர் பேரவையின் பதவியேற்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளியின் மாணவத் தலைவர்களை தேர்ந்தெடுக்க டிஜிட்டல் முறையில் வாக்குப்பதிவு வெளிப்படையாக நடத்தப்பட்டது. இதன் மூலம் வாக்குரிமையைப் பயன்படுத்தி, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மாணவ பிரதிநிதிகளுக்கு கூடுதல் ஆட்சியர் பதவி பிரமாணம் செய்து வைத்து, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குனர்கள் வக்கீல் கவுதமன், டாக்டர் புவியரசன் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
- கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- கிருஷ்ணகிரி சரக உருது வட்டார கல்வி அலுவலர் பயாஸ் வரவேற்புரை யாற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கோட்டை நகராட்சி பெண்கள் நடுநிலைப்பள்ளியில், மாவட்ட உருது சரக தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு உருது அகாடமி மற்றும் இந்தியன் அபாகஸ் இணைத்து கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி சரக உருது வட்டார கல்வி அலுவலர் பயாஸ் வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு உருது அகாடமி துணைத் தலைவர் டாக்டர். நயிமுர் ரஹ்மான் மற்றும் இந்தியன் அபாகஸ் நிறுவன சேர்மேன் மற்றும் நிர்வாக இயக்குநர் பஷீர்அகமது, கிரிஸ் குளோபல் சர்வீஸஸ் இயக்குநர் டாக்டர். சாலமன், தமிழ்நாடு அரசு உருது அகாடமி உறுப்பினர்கள் அப்துல்கனி, அக்மல்பாஷர் ஆகியோர் சரக உருது துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அபாகஸ் அடிப்படையிலான எண் கணிதம் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவுலதாபாத் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) யாரப்பாஷா, கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) பஷீராபேகம், ஆசிரிய, ஆசிரியர்கள் சாந்தி, ஹசீன்தாஜ், உசேன்பானு, ரியாஜின்னிஸா, வின்சென்ட்பால்ராஜ், சத்துணவு அமைப்பாளர் ராதிகா ஆகியோர் செய்திருந்தனர்.






