விபத்தில் 3 பேர் சாவு

அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் 3 பேர் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குட்டியப்பா நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது28). தொழிலாளி. இவர் நேற்று ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சீதாராம் மேடு பகுதி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கண்டகனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (28). ஜே.சி.பி. ஆப்ரேட்டரான இவர் தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் தனது புல்லட் வண்டியில் நேற்று சென்றார். அப்போது அவர் அங்குள்ள வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் சிவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (27). கால்நடை வியாபாரியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த பிக்அப் வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com