என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி கடந்த 2006 மற்றும் 2011–ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. எனவே 10 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சீபுரம் தொகுதியில் தி.மு.க. போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு காஞ்சீபுரம் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் காஞ்சீபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மைதில் திருநாவுக்கரசு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து திமுகவினர் கூறும் போது, ‘10 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளோம்.
காஞ்சீபுரத்தில் தளபதி ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே எழுச்சி பயணம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்ப்பினை பெற்றது.
ஆப்பூரில் விடியல் மீட்பு பேரணியில் பல லட்சம் பேர் உற்சாகத்துடன் பற்கேற்றனர். தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்த அடுத்தநொடியே களத்தில் இறங்கி உற்சாகத்துடன் பணியாற்ற காத்திருக்கிறோம்’ என்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள கூத்தவாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் வட்டாட்சியரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான விமல்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கட்டு கட்டாக ரூ.21லட்சம் பணம் இருந்தது.
காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்த போது, தனியார் நிதி நிறுவனம் சார்பில் வசூல் செய்யப்படும் டாஸ்மாக் பணம் என கூறினர்.
ஆனால் அதற்கான ஆவணங்களை காட்ட மறுத்தனர் இதனால் பணத்தையும் காரையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் கிண்டியில் உள்ள தனியார் நிதி கையாளும் நிறுவன அதிகாரிகள் பணம் வசூலித்த டாஸ்மாக் கடை விபரங்கள் மற்றும் பணத்தை செலுத்த போகும் வங்கியின் விபரங்களை கொடுத்தனர்.
இதையடுத்து பணத்தையும் காரையும் போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பத்தில் தேர்வாய்–கண்டிகை கண்ணன் கோட்டை தனி வட்டாட்சியர் சுரேஷ்பாபு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்களிடம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக் கம் இருந்தது.
அதில் இருந்தவர்களிடம் விசாரித்த போது திருச்சியில் ஜே.சி.பி. எந்திரம் வாங்க அட்வான்ஸ் கொடுப்பதற்காக பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி ஜந்துரதம் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு கடையை மூடிவிட்டு சென்ற பிறகு நள்ளிரவில் மர்மநபர்கள் கடை பூட்டை உடைத்து ரகசிய இடத்தில் வைத்திருந்த 20ஆயிரம் ரொக்க பணத்தையும் ரூ5ஆயிரம் மதிப்புடைய சிகரட் மற்றும் பிஸ்கட்டை திருடினார்கள்.
பின்னர் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்த காணிக்கை பணத்தையும் கொள்ளை யடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரங்கிமலை பகுதி வானுவம்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 23). மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது தாய் மல்லிகா மீனம்பாக்கத்தில் இளநீர் கடை வைத்து உள்ளார்.
தாயை பார்க்க மீனம்பாக்கம் வரும் போது விஜயகுமாருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்–2 மாணவி மீது காதல் கொண்டார். இருவருமே அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
கடந்த 1–ந் தேதி பிளஸ்–2 தேர்வு முடிந்தது. தேர்வு எழுதி வந்த மாணவியை விஜயகுமார் திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றார். பின்னர் குன்றத்தூர் கோவிலில் அவளை திருமணம் செய்து கொண்டார்.
விஜயபெருமாள் மகள் மாயமானதை அறிந்த மாணவியின் தந்தை சிவதயாளன் மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். நேற்று கீழ்க்கட்டளை பஸ் நிலையத்தின் நின்ற அவர்களை பிடித்தனர்.
விசாரணையில் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. ஆனால் மாணவி பெற்றோருடன் செல்வதாக கூறியதால் போலீசார் அறிவுரை வழங்கி பெற்றோரிடம் மாணவியை ஒப்படைத்தனர்.
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தாவில் இருந்து இன்று காலை சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கினர்.
அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இறங்காதது குறித்து விமான பணி பெண்கள் விமான நிலைய டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். டாக்டர் சோதனை செய்து பார்த்த போது அவர் மரணம் அடைந்து இருப்பது தெரிந்தது.
போலீசார் விசாரணையில் இறந்தவர் கொல்கத்தாவை சேர்ந்த சகடெத் அலி (46) என்பதும், சிகிச்சைக்காக வேலூர் செல்ல வந்திருப்பதும் தெரியவந்தது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் பள்ளிகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், தொலைபேசி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே காஞ்சீபுரம் காமராஜர் சாலையில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் பா.ம.க. சார்பில் உங்கள் ஊர் உங்கள் அன்புமணி என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகர்கள், நெசவா ளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என 25-க்கும் மேற்பட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
இந்தியா முழுமைக்கும் திட்டங்கள் தீட்டிய எங்களுக்கு தமிழக திட்டங்கள் என்பது சாதாரணமானது. 50 ஆண்ட காலம் தமிழகத்தை திராவிட கட்சிகள் சீர்கேடு ஆக்கியுள்ளன. அதனை சீர்படுத்த எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்.
அனைத்து கட்சிகளும் அடுத்த தேர்தலை பற்றியே நினைக்கும் பாமக மட்டுமே அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக உண்மையான எதிர்கட்சியாக செயல்பட்டது பாமக மட்டுமே. தற்போது சிறுவர்கள் பெண்கள் என பல தரப்பட்டவர்களும் மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒருஒரு கிராமத்திலும் மதுவால் 60 விதவைகள் உள்ளனர். வாக்குகாக மட்டும் மது விலக்கு பற்றி பேசும் கட்சி பா.ம.க. அல்ல. பல ஆண்டுகளாக மதுவிற்கு எதிராக போராடி வருகிறோம்.
பிற கட்சிகள் மது விலக்கினை தற்போது தான் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. விவசாய மேம்பாட்டிற்காக அந்த துறைக்கு வேளாண்துறை, தோட்ட கலைதுறை, நீர் மேலாண்மை துறை என 3 அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். விவசாயத்திற்கு இந்தியாவில் எங்குமில்லாத வகையில் தனி பட்ஜெட் போடப்பட்டும்.
சமீபத்தில் பெய்த பெரு மழையின் போது சரியான திட்டமிடல் இல்லாததால் 32 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு 1 என தடுப்பணைகள் கட்டுவோம். காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆட்சியாளர்களின் அணுகு முறை சரியில்லாத காரணத்தினால் 75 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பா.ம.க. துணை நிற்கும்.
காஞ்சீபுரத்தில் போலி பட்டு இடைத்தரகர்கள் மற்றும் அரசியில் தலையீடு அனைத்தும் ஒழிக்கப்பட்டு நெசவாளர்களின் நலன் காக்கப்படும். தமிழகத்தில் 4532 நூலகங்கள் உள்ளன. அவற்றில் 60 சதவீததிற்கு நூலகர்களே இல்லை.
ஆனால் 8 ஆயிரம் டாஸ்மாக் பார் உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் 12 ஆயிரம் புதிய பள்ளிகளை திறந்தார். ஆனால் 2 திராவிட கட்சிகளை சேர்ந்து டாஸ்மாக் பார்களை மட்டுமே திறந்து மாணவர்களை குடிகாரர்களாக ஆக்கியது.
அறிஞர் அண்ணா மது விலக்கில் உறுதியாக இருந்தார். அதன் முலம் பெறும் வருவாய் குஷ்டரோகி கையில் உள்ள வெண்ணெய் போன்றது எனக் கூறினார். ஆனால் அவர் உருவாக்கிய தி.மு.க. அவர் வழி நடப்பதாக கூறும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மதுக்கடைகளை திறந்தன. ஆனால் நாங்கள் மது விலக்கில் உறுதியாக உள்ளோம். எனவே அண்ணாவின் கொள்கைகளை உண்மையாக பின்பற்றுபவர்கள் நாங்களே.
இவ்வாறு அவர் பேசினார்.
தாம்பரம், ஏப். 2–
தாம்பரம் சேலையூர் பாரதி நகர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
இவரது மகன் திவாகர் (17). பிளஸ்–2 மாணவரான இவர் நேற்றுதான் தேர்வு எழுதி முடித்துள்ளார். இவர் தனது தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டு இருந்தார்.
தேர்வு முடிந்தவுடன் வாங்கி தருவதாக தந்தை ராமகிருஷ்ணன் உறுதி அளித்தார். தேர்வு முடித்து வந்ததும் மீண்டும் பைக் கேட்டான். நாளை வாங்கி தருவதாக தந்தை கூறினார்.
இதனால் மாணவன் திவாகர் தந்தையிடம் கோபித்து கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார்.
இரவு திவாகர் தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மகன் பிணமாக தொங்குவதை இன்று காலை பார்த்த பெற் றோர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மகான்யம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). இவர் அந்த பகுதியில் 10 சென்ட் வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்வதற்காக செங்கல்பட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திட்ட மதிப்பீடு கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விண்ணப்பித்திருந்தார்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கோவிந்தன் (41) நிலத்தின் மதிப்பீட்டை குறைத்து போட லஞ்சமாக ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் இதுகுறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரனிடம் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைபடி ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கண்ணன் கோவிந்தனிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை செங்கல்பட்டு கூடுதல் அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோவிந்தனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க ஊராட்சி ஒன்றியம் தோறும் புதிய குடியிருப்புகள் கட்ட தீர்மானிக்கப்பட்டு 443 வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாங்குளம் ஊராட்சியில் சுமார் ரூ.45 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான நிலம் ஒதுக்கப்பட்டு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோட்டநாவல், சடச்சிவாக்கம், ரெட்டமங்கலம், நெல்வேலி, எலப்பாக்கம், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், சிறுபினாயூர், தண்டரை, எடையும்புதூர், கிடங்கரை, கிளக்காடி, திருமுக்கூடல், பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, சமூக நலத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
எனவே காலிப்பணி இடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் வருகிற 23-ந்தேதி மாலை 5.45-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து கடத்தி வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்தவர்கள் அதை கழிவறையில் பதுக்கி வைத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய கழிவறையில் சோதனை நடத்திய போது 9.02 கிலோ எடை கொண்ட தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4.21 கோடி ஆகும்.
இந்த தங்கம் துபாய் விமானத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது ஆகும். தங்கத்தை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






