என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் பிளஸ்–2 மாணவன் தற்கொலை
    X

    தாம்பரம் பிளஸ்–2 மாணவன் தற்கொலை

    தாம்பரம் பிளஸ்2 மாணவன் தற்கொலை தந்தை பைக் வாங்கி கொடுக்காததால் விரக்தி

    தாம்பரம், ஏப். 2–

    தாம்பரம் சேலையூர் பாரதி நகர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

    இவரது மகன் திவாகர் (17). பிளஸ்–2 மாணவரான இவர் நேற்றுதான் தேர்வு எழுதி முடித்துள்ளார். இவர் தனது தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டு இருந்தார்.

    தேர்வு முடிந்தவுடன் வாங்கி தருவதாக தந்தை ராமகிருஷ்ணன் உறுதி அளித்தார். தேர்வு முடித்து வந்ததும் மீண்டும் பைக் கேட்டான். நாளை வாங்கி தருவதாக தந்தை கூறினார்.

    இதனால் மாணவன் திவாகர் தந்தையிடம் கோபித்து கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

    இரவு திவாகர் தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மகன் பிணமாக தொங்குவதை இன்று காலை பார்த்த பெற் றோர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×