என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் 10 ஆண்டுக்கு பிறகு அ.தி.மு.க.– தி.மு.க. நேரடி போட்டி?
    X

    காஞ்சீபுரத்தில் 10 ஆண்டுக்கு பிறகு அ.தி.மு.க.– தி.மு.க. நேரடி போட்டி?

    தமிழக சட்ட சபை தேர்தலில் காஞ்சீபுரத்தில் 10 ஆண்டுக்கு பிறகு அ.தி.மு.க. – தி.மு.க. நேரடி போட்டி

    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி கடந்த 2006 மற்றும் 2011–ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    தற்போது சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. எனவே 10 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சீபுரம் தொகுதியில் தி.மு.க. போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு காஞ்சீபுரம் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சீபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மைதில் திருநாவுக்கரசு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து திமுகவினர் கூறும் போது, ‘10 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளோம்.

    காஞ்சீபுரத்தில் தளபதி ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே எழுச்சி பயணம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்ப்பினை பெற்றது.

    ஆப்பூரில் விடியல் மீட்பு பேரணியில் பல லட்சம் பேர் உற்சாகத்துடன் பற்கேற்றனர். தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்த அடுத்தநொடியே களத்தில் இறங்கி உற்சாகத்துடன் பணியாற்ற காத்திருக்கிறோம்’ என்றனர்.

    Next Story
    ×