என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் விநாயகர் கோவில் உண்டியல் கொள்ளை
    X

    மாமல்லபுரத்தில் விநாயகர் கோவில் உண்டியல் கொள்ளை

    மாமல்லபுரத்தில் விநாயகர் கோவில் உண்டியல் கொள்ளை மளிகை கடையில் பணம்– சிகரெட்டை அள்ளி சென்றனர்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி ஜந்துரதம் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    நேற்றிரவு கடையை மூடிவிட்டு சென்ற பிறகு நள்ளிரவில் மர்மநபர்கள் கடை பூட்டை உடைத்து ரகசிய இடத்தில் வைத்திருந்த 20ஆயிரம் ரொக்க பணத்தையும் ரூ5ஆயிரம் மதிப்புடைய சிகரட் மற்றும் பிஸ்கட்டை திருடினார்கள்.

    பின்னர் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்த காணிக்கை பணத்தையும் கொள்ளை யடித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×