என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்–2 மாணவியை கடத்தி திருமணம்: பெட்ரோல் பங்க் ஊழியர் கைது
    X

    பிளஸ்–2 மாணவியை கடத்தி திருமணம்: பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

    மீனம்பாக்கத்தில் ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கடத்திய பெட்ரோல் பங்க் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    பரங்கிமலை பகுதி வானுவம்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 23). மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது தாய் மல்லிகா மீனம்பாக்கத்தில் இளநீர் கடை வைத்து உள்ளார்.

    தாயை பார்க்க மீனம்பாக்கம் வரும் போது விஜயகுமாருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்–2 மாணவி மீது காதல் கொண்டார். இருவருமே அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    கடந்த 1–ந் தேதி பிளஸ்–2 தேர்வு முடிந்தது. தேர்வு எழுதி வந்த மாணவியை விஜயகுமார் திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றார். பின்னர் குன்றத்தூர் கோவிலில் அவளை திருமணம் செய்து கொண்டார்.

    விஜயபெருமாள் மகள் மாயமானதை அறிந்த மாணவியின் தந்தை சிவதயாளன் மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். நேற்று கீழ்க்கட்டளை பஸ் நிலையத்தின் நின்ற அவர்களை பிடித்தனர்.

    விசாரணையில் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. ஆனால் மாணவி பெற்றோருடன் செல்வதாக கூறியதால் போலீசார் அறிவுரை வழங்கி பெற்றோரிடம் மாணவியை ஒப்படைத்தனர்.

    மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×