என் மலர்
காஞ்சிபுரம்
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க இ.கோர்ட்டு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருவதாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் நடக்கும் மண்டல பத்திரிகை ஆசிரியர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்துள்ளேன். பிரதமர் மோடியின் 2 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் குக்கிராமங்கள் உள்பட அனைத்து துறை திட்டங்கள் சென்று அடைந்து இருக்கிறது.
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க இ.கோர்ட்டு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆங்கிலத்தில் பேட்டி அளித்த ரவிசங்கர் பிரசாத், பிரதமர் மோடி ஆட்சி என்று குறிப்பிடுவதற்கு பதில் முதல்-அமைச்சர் மோடி ஆட்சியில் என்று தவறாக இரண்டு முறை கூறினார்.

சென்னை விமான நிலையம் எதிரே ஜெயின் கோவில் பூட்டை உடைத்து 18 கிலோ வெள்ளி கவசங்கள் மற்றும் ரூ.45 ஆயிரம் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை விமான நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி. சாலையில் மகாவீர் ஜெயின் கோவில் உள்ளது. சந்திர்பிரபு ஜெயின் சேவா மண்டல் டிரஸ்ட் சார்பில் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெயின் சமூகத்தினர் இந்த கோவிலில் வழிபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கோவிலில் மெயின் கேட்டு பூட்டுக்களை பூட்டி விட்டு காவலாளி காவலுக்கு இருந்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் அங்குள்ள போஜன அறையில் காவலாளி தூங்கச்சென்று விட்டார்.
அப்போது கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த 3 கொள்ளையர்கள், கோவிலில் சாமி சிலைகளுக்கு அணிவிக்க வைத்து இருந்த சுமார் 18 கிலோ எடை உள்ள வெள்ளி கவசங்களையும், உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.45 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று காலையில் கோவிலுக்கு வந்தவர்கள், வெள்ளி கவசங்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
நிர்வாகிகள் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது அதில் 3 கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் 2 கொள்ளையர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. ஒரு கொள்ளையன் உருவம் சரியாக தெரியவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி முனிலால், பல்லாவரம் போலீசில் புகார் செய்தார்.
பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் உருவம் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை மோடத்துடன் பல்லாவரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எடுத்துச்சென்று அதில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாதுகாப்பு மிகுந்த சென்னை விமான நிலையம் எதிரில் உள்ள ஜெயின் கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாமல்லபுரம் அருகே 4-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் இருளப்பன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து புவனேஸ்வரி வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவள் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது நிலைமை மோசமாக உள்ளது.

படப்பையில் அதிகாரி மனைவி திவ்யாவின் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வரதட்சணை கேட்டு கணவரே கொன்றதாக மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தாம்பரம்:
சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை சக்திநகரில் வசித்து வருபவர் கோவிந்தன். கார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி திவ்யா (வயது 28). இந்த தம்பதிக்கு தர்ஷன் (4), ரூபிகா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவர் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். திவ்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.
மதியம் குழந்தைகளை கூட்டிக்கொண்டு கோவிந்தனின் உறவினர் வீட்டிற்கு வந்தபோது குளியல் அறையில் திவ்யா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோவிந்தனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டிற்கு வருவதற்குள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
திவ்யாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
திவ்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 45 பவுன் நகைகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது. நகைக்காகவே அவர் கொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பட்டப்பகலில் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இந்த பயங்கர செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திவ்யாவின் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை நகைக்காக கொள்ளையர்கள் கொலை செய்யவில்லை. வரதட்சணை கேட்டு அவரது கணவரே கொன்றதாக திவ்யாவின் தாயார் அம்பிகா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் காஞ்சீபுரத்தில் இருந்து கதறி அழுதபடி ஓடோடி வந்த அவர் போலீசில் கொடுத்த புகாரில் கூறியதாவது:-
என் மகளை கோவிந்தனுக்கு 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தோம். திருமணத்தின் போது 25 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தோம். திருமணம் ஆன நாளில் இருந்து வரதட்சணை கேட்டு அவர் கொடுமைப்படுத்தி வருகிறார். இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.
நகை-பணம் கேட்டு என் வீட்டிற்கு திவ்யா பலமுறை வந்துள்ளார். அவளை சமாதானம் செய்து என்னிடம் இருந்த பணத்தை கொடுத்து அனுப்புவேன். பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வருவதாக அவள் என்னிடம் போனிலும் தெரிவித்தாள்.
கேட்ட வரதட்சணை தராததால் அவளை அடித்து கொன்று விட்டு நகை கொள்ளை போனதாக நாடகம் ஆடுகிறார்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசாரின் விசாரணை மறு கோணத்தில் நடக்கிறது. தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குமார், பாஸ்கர் ஆகியோர் கோவிந்தனிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திவ்யாவை அவரது கணவரே கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வரதட்சணை தொடர்பான தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
திவ்யா கழுத்தில் கிடந்த தாலி சரடு அறுந்து வீட்டின் ஒரு பகுதியில் கிடந்துள்ளது. பீரோவில் இருந்த நகை எதுவும் கொள்ளை போகவில்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பிணமாக கிடந்த திவ்யாவின் முகத்தில் சிறு சிறு கீறல்கள், காயங்கள் இருந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தாரா? தலையில் அடிபட்டு இறந்தாரா? என்பது போன்ற சந்தேகங்கள் தெளிவாகும்.

சென்னை விமான நிலையத்தில் உரிய ஆவணமின்றி மலேசியாவுக்கு கொண்டு செல்ல இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனையில் சிக்கியது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை மலேசியா செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த காஜாஉசேனின் சூட்கேசை திறந்து பார்த்த போது கட்டுகட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தன.
இதே போல் திருவள்ளூரை சேர்ந்த சபீர், கோவையை சேர்ந்த காஜாஉதீன் ஆகியோரது சூட்கேசிலும் அமெரிக்க டாலர்கள் இருந்தன. பணத்திற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும்.
பிடிபட்ட காஜாஉசேன் உள்பட 3 பேரும் நண்பர்கள் ஆவர். அவர்கள் சுற்றுலா விசாவில் மலேசியா செல்ல இருந்தது தெரிந்தது.
அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் கிடைத்தது எப்படி? எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சேலையூரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த சேலையூரில் தாம்பரம் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10 ஆசிரியைகளும் 250 மாணவ- மாணவிகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் போதிய மாணவ-மாணவிகள் இல்லாததால் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் நகராட்சி துப்புரவு பணிக்கு கொண்டுவரப்பட்ட பிளச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதில் சுமார் 10 டன்னுக்கு மேல் பிளச்சிங் பவுடர் மூட்டைகளை தாம்பரம் நகராட்சி சுகாதார பிரிவினர் அடுக்கி வைத்து அந்த அறையை பூட்டுப்போட்டு மூடிவைத்தனர்.
பள்ளி வழக்கம்போல நேற்று காலை தொடங்கி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென பிளச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து கடுமையான மருந்து நெடியுடன் புகை வந்தது. இதனால் பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் குமட்டல் ஏற்பட்டது.
பிளச்சிங் பவுடர் தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை நாற்றம் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியதால் பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். உடனடியாக பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அருகில் குளக்கரை பகுதியில் இருந்த கோவில் வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். கடுமையாக மருந்து நாற்றம் அடித்ததால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட முகமூடி அணிந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் தீயணைப்பு வீரர்கள் போராடி புகையை கட்டுப்படுத்தினர். இதன் பின்பு பிளச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைகளின் கதவுகளை உடைத்து, சுவரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து எரிந்த மூட்டைகளை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த விபத்து காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. கல்வித் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளிக்கு உள்ளேயே பிளச்சிங் பவுடர், சுத்தம் செய்யும் திராவகம் போன்ற ஆபத்தான பொருட்களை நகராட்சி சுகாதாரத் துறையினர் அடுக்கி வைத்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் அவை எப்படி இருக்கிறது என்று எந்த அதிகாரியும் ஒரு நாளும் ஆய்வு செய்ததில்லை. பல மாதங்களாக அவை பூட்டிய அறையில் இருந்ததால் வெப்பம் அதிகரித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதுமே மருந்து நாற்றம் அடித்ததால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான பொருட் களை பள்ளியில் வைப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றனர்.
இந்த சம்பவத்தால் சேலையூர் பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

தாம்பரம் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன அதிகாரியின் மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பை சக்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். சின்னமலையில் உள்ள பிரபல தனியார் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (வயது 28).
இவர்களுக்கு தர்ஷன் (4), ரூபிகா (3) என 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கோவிந்தன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் திவ்யா மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில், கோவிந்தனின் சகோதரி மகள் அமுதா, பள்ளியில் இருந்து தர்ஷன், ரூபிகா இருவரையும் அழைத்துக்கொண்டு கோவிந்தனின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கிரில் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அதை திறந்து அமுதா உள்ளே சென்று குரல் கொடுத்தபோது திவ்யாவை காணவில்லை.
அப்போது வீட்டின் குளியல் அறையில் திவ்யா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் அங்கு வந்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளையர்கள் திவ்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து குளியல் அறையில் போட்டு விட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் உள்பட 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதனை அடுத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை, கொள்ளை சம்பவம் படப்பை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக விஜயவாடாவில் உள்ள ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்துரு விரதத்தை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடத்தி வருகிறார்.
ஆடி மாதத்தில் தொடங்கிய இந்த விரதம் 2 மாதம் நடக்கும். விரதத்தின் போது விஜயவாடாவிலேயே தங்கி இருந்து பூஜை செய்ய வேண்டும்.
அங்கிருந்து வெளியே செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி விஜயவாடாவிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காஞ்சி மட நிர்வாகிகள், சீடர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள ஆந்திர ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சர்க்கரை அளவு குறைந்ததால் அவர் மயங்கி விழுந்தது தெரிந்தது. இதையடுத்து அவருக்கு 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக காஞ்சி மட நிர்வாகிகள் கூறுகையில், ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகளின் உடல்நிலை சீராக உள்ளது. பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

தே.மு.தி.க.வில் இருந்து யாராவது வருவார்களா என மு.க.ஸ்டாலின் பார்த்து கொண்டு இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நகர அவை தலைவர் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
இன்றைக்கு விஜயகாந்த் 300 கோடி வாங்கிவிட்டார், 500 கோடி வாங்கிவிட்டார் என எத்தனை ஏளன பேச்சுகள். 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. தொடங்கப்படும் வரை தமிழகத்தில் விஜயகாந்தை போல ஒரு வள்ளல் இல்லை, அவரை போல கர்ணன் இல்லை, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் மக்களுக்கு கொடுத்தவர் என மக்களால் போற்றப்பட்டவர்.
2005-ம் ஆண்டுக்குப்பின் விஜயகாந்த் தி.மு.க.விடம் பணம் வாங்கினார், அ.தி.மு.க.விடம் பணம் வாங்கினார், பா.ஜ.க.விடம் பணம் வாங்கினார் என்றால் அது எப்படி உண்மையாகும். விஜயகாந்த் என்றைக்கும் யாருக்கும் விலை போகமாட்டார்.
சட்டசபையில் மு.க.ஸ்டாலின் போஸ் கொடுத்து வெளியில் வருகிறார். நமக்கு நாமே என கூறி டீ சாப்பிட்டு போஸ் கொடுத்தார். இன்றைக்கு சட்டசபையில் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். தே.மு.தி.க.வில் இருந்து யாராவது வருவார்களா என அவர் பார்த்து கொண்டிருக்கிறார். தே.மு.தி.க. லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான அனகை முருகேசன், உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர். நகர செயலாளர் ஜெயகுமார் அனைவரையும் வரவேற்றார்.

அடையாறில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை பறித்த கொள்ளையன், பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டரை பிளேடால் வெட்டினான்.
திருவான்மியூர்:
அடையாறு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கன்னிகா. இவர் அங்குள்ள நகைக்கடைக்கு சென்று நகை வாங்கினார். போலீஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தபோது வழிப்பறி கொள்ளையன் ஒருவன் அவரிடம் இருந்த நகையை பறித்துக்கொண்டு ஓடினான்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் அவனை விரட்டினார்கள். தகவல் கிடைத்து அடையாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் விரைந்து வந்து கொள்ளையனை பிடிக்க முயன்றார்.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலத்தை கொள்ளையன் பிளேடால் வெட்டி தப்பி ஓடினான். இதில் படுகாயம் அடைந்த அருணாசலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடிப்பிடித்து கைது செய்தனர். அவன் பெயர் சீனிவாசன். கண்ணகி நகரைச் சேர்ந்த இவன் தென்சென்னையை கலக்கிய நகை பறிப்பு கொள்ளையன் ஆவான்.
இவன் மீது திருவான்மியூர், அடையாறு, கண்ணகிநகர், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்பட பல போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன.

தாம்பரத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் முடிச்சூர் நம்மாழ்வார் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் படுக்கை அறையில் தூங்கினார்.
இன்று காலை எழுந்து வெளியே வர அறையை திறக்க முயன்ற போது கதவு திறக்கவில்லை. அது வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது உடனே பரமேஸ்வரன் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் வந்து கதவை திறந்து விட்டனர்.
நேற்று இரவு வீட்டு பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.
மேலும் பரமேஸ்வரன் சத்தம் கேட்டு வெளியே வந்து விடாமல் இருக்க படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டி உள்ளனர்.
இதுகுறித்து பிர்க்கன் கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா புஷ்பா எம்.பி. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையை சொல்லலாமே தவிர ஒட்டுமொத்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
குளச்சல் துறைமுகத்தின் தற்காலிக அலுவலகத்தின் திறப்பு விழா வருகிற 5-ந் தேதி கருங்கல் அருகே நடைபெற உள்ளது.
குளச்சல் துறைமுகத்திற்கு விரோதமாக போராட்டத்தை தூண்டி விடுபவர்கள் மீனவர் சமுதாயத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள். குளச்சல் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் சமுதாயம் மிக பெரும் முன்னேற்றம் அடையும்.
வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் என்னை பொருத்தமட்டில் பா.ஜனதா தனியாக தான் போட்டியிட வேண்டும். இது என்னுடைய கருத்து.