என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமானநிலையத்தில் ரூ.20 லட்சம் அமெரிக்க டாலருடன் 3 வாலிபர்கள் சிக்கினர்
    X

    சென்னை விமானநிலையத்தில் ரூ.20 லட்சம் அமெரிக்க டாலருடன் 3 வாலிபர்கள் சிக்கினர்

    சென்னை விமான நிலையத்தில் உரிய ஆவணமின்றி மலேசியாவுக்கு கொண்டு செல்ல இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனையில் சிக்கியது.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை மலேசியா செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த காஜாஉசேனின் சூட்கேசை திறந்து பார்த்த போது கட்டுகட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தன.

    இதே போல் திருவள்ளூரை சேர்ந்த சபீர், கோவையை சேர்ந்த காஜாஉதீன் ஆகியோரது சூட்கேசிலும் அமெரிக்க டாலர்கள் இருந்தன. பணத்திற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.

    இதையடுத்து அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும்.

    பிடிபட்ட காஜாஉசேன் உள்பட 3 பேரும் நண்பர்கள் ஆவர். அவர்கள் சுற்றுலா விசாவில் மலேசியா செல்ல இருந்தது தெரிந்தது.

    அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் கிடைத்தது எப்படி? எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×