என் மலர்
செய்திகள்

ஜெயின் கோவிலில் 18 கிலோ வெள்ளி கவசங்கள் கொள்ளை: உண்டியலை உடைத்து ரூ.45 ஆயிரத்தையும் அள்ளிச்சென்றனர்
சென்னை விமான நிலையம் எதிரே ஜெயின் கோவில் பூட்டை உடைத்து 18 கிலோ வெள்ளி கவசங்கள் மற்றும் ரூ.45 ஆயிரம் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை விமான நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி. சாலையில் மகாவீர் ஜெயின் கோவில் உள்ளது. சந்திர்பிரபு ஜெயின் சேவா மண்டல் டிரஸ்ட் சார்பில் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெயின் சமூகத்தினர் இந்த கோவிலில் வழிபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கோவிலில் மெயின் கேட்டு பூட்டுக்களை பூட்டி விட்டு காவலாளி காவலுக்கு இருந்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் அங்குள்ள போஜன அறையில் காவலாளி தூங்கச்சென்று விட்டார்.
அப்போது கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த 3 கொள்ளையர்கள், கோவிலில் சாமி சிலைகளுக்கு அணிவிக்க வைத்து இருந்த சுமார் 18 கிலோ எடை உள்ள வெள்ளி கவசங்களையும், உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.45 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று காலையில் கோவிலுக்கு வந்தவர்கள், வெள்ளி கவசங்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
நிர்வாகிகள் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது அதில் 3 கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் 2 கொள்ளையர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. ஒரு கொள்ளையன் உருவம் சரியாக தெரியவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி முனிலால், பல்லாவரம் போலீசில் புகார் செய்தார்.
பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் உருவம் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை மோடத்துடன் பல்லாவரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எடுத்துச்சென்று அதில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாதுகாப்பு மிகுந்த சென்னை விமான நிலையம் எதிரில் உள்ள ஜெயின் கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story