என் மலர்
செய்திகள்

திவ்யா
தாம்பரம் அருகே பட்டப்பகலில் அதிகாரியின் மனைவி கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தாம்பரம் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன அதிகாரியின் மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பை சக்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். சின்னமலையில் உள்ள பிரபல தனியார் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (வயது 28).
இவர்களுக்கு தர்ஷன் (4), ரூபிகா (3) என 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கோவிந்தன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் திவ்யா மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில், கோவிந்தனின் சகோதரி மகள் அமுதா, பள்ளியில் இருந்து தர்ஷன், ரூபிகா இருவரையும் அழைத்துக்கொண்டு கோவிந்தனின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கிரில் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அதை திறந்து அமுதா உள்ளே சென்று குரல் கொடுத்தபோது திவ்யாவை காணவில்லை.
அப்போது வீட்டின் குளியல் அறையில் திவ்யா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் அங்கு வந்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளையர்கள் திவ்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து குளியல் அறையில் போட்டு விட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் உள்பட 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதனை அடுத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை, கொள்ளை சம்பவம் படப்பை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story