என் மலர்
செய்திகள்

அடையாறில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை பறித்த கொள்ளையன்
அடையாறில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை பறித்த கொள்ளையன், பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டரை பிளேடால் வெட்டினான்.
திருவான்மியூர்:
அடையாறு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கன்னிகா. இவர் அங்குள்ள நகைக்கடைக்கு சென்று நகை வாங்கினார். போலீஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தபோது வழிப்பறி கொள்ளையன் ஒருவன் அவரிடம் இருந்த நகையை பறித்துக்கொண்டு ஓடினான்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் அவனை விரட்டினார்கள். தகவல் கிடைத்து அடையாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் விரைந்து வந்து கொள்ளையனை பிடிக்க முயன்றார்.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலத்தை கொள்ளையன் பிளேடால் வெட்டி தப்பி ஓடினான். இதில் படுகாயம் அடைந்த அருணாசலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடிப்பிடித்து கைது செய்தனர். அவன் பெயர் சீனிவாசன். கண்ணகி நகரைச் சேர்ந்த இவன் தென்சென்னையை கலக்கிய நகை பறிப்பு கொள்ளையன் ஆவான்.
இவன் மீது திருவான்மியூர், அடையாறு, கண்ணகிநகர், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்பட பல போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன.

Next Story