என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் பவானி, நசியனூர், அந்தியூர், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த 20-ந் தேதி முதல் தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானி, நசியனூர், அந்தியூர், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இளைஞர் களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளதால் கடந்த 5 நாட்களில் மட்டும் 10 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து மக்கள் நல்வாழ்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    கடந்த 5 நாட்களில் மட்டும் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக ஆங்காங்கே நடத்தப்பட்ட முகாம்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதே போல மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனை 6 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு மேற்கொள் ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநில மது, தமிழகத்தில் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநில மது, தமிழகத்தில் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் கர்நாடகாவில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களில் மது கடத்தல் அமோகமாக நடக்கிறது. இந்த நிலையில் ரெயிலிலும் மதுவை கடத்தி வர தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மது கடத்தி வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து ஈரோடு மதுவிலக்கு போலீசார் ஈரோடு ரெயில்வே நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு வந்த மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். இதில் மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த மதன்குமார் (வயது 28) என்பவரிடம் இருந்து 164 கர்நாடகா மாநிலம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மதன்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

    இதேபோல் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு ஈரோடு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சியை சேர்ந்த நெப்போலியன் (33), ஜான் (23) ஆகியோரிடம் 31 கர்நாடக மாநிலம் மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

    மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநில மது, தமிழகத்தில் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் கர்நாடகாவில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களில் மது கடத்தல் அமோகமாக நடக்கிறது. இந்த நிலையில் ரெயிலிலும் மதுவை கடத்தி வர தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மது கடத்தி வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து ஈரோடு மதுவிலக்கு போலீசார் ஈரோடு ரெயில்வே நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு வந்த மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். இதில் மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த மதன்குமார் (வயது 28) என்பவரிடம் இருந்து 164 கர்நாடகா மாநிலம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மதன்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

    இதேபோல் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு ஈரோடு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சியை சேர்ந்த நெப்போலியன் (33), ஜான் (23) ஆகியோரிடம் 31 கர்நாடக மாநிலம் மது பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வேலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சீரங்கன். இவரது மகள் சிவகாமி (வயது 41). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டாம் பரப்பை சேர்ந்த பரணீஸ்வரன் என்பவருக்கும் சிவகாமிக்கும் திருமணம் நடந்தது.

    பரணீஸ்வரன் திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சிவானிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரணீஸ்வரன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு தனி அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். இரவில் சிவகாமி கழிவறைக்கு சென்றார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

    இதையடுத்து மாமியார் கழிவறைக்கு சென்று பார்த்தார். அப்போது சிவகாமி வாயிலும், காதிலும் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் நள்ளிரவில் சிவகாமியின் தந்தைக்கு போன் செய்து உங்கள் மகள் இறந்து விட்டார் என கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவகாமியின் தந்தை சீரங்கன் புறப்பட்டு வெள்ளோட்டாம் பரப்பில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு காது, வாயில் ரத்தம் கசிந்த படி சிவகாமி கட்டிலில் படுத்த நிலையில் இறந்து கிடந்தார்.

    குறித்து சீரங்கன் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளார்.

    அதன் பேரில் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவகாமியின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகாமி எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை டி.எஸ்.பி செல்வராஜ், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதின் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிவகாமியின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குரங்குகளின் மீது அன்பை செலுத்தி வந்த முதியவர் ராமலிங்கம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா கோரப்பிடியில் சிக்கி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள வடவள்ளியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). இவர் கடந்த ஆறு வருடங்களாக தனது வீட்டில் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் குரங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்கி வந்துள்ளார்.

    இதனால் நாளடைவில் குரங்குகள் இவருடன் சகஜமாக பழக ஆரம்பித்தது. பிறகு குரங்குகளுக்கு பழங்கள் பட்டாணி, சுண்டல் போன்றவைகளை கொடுத்து வந்துள்ளார். குரங்குகளும் மிகவும் சகஜமாக அவர் தோள் மீது ஏறிக்கொண்டு நண்பன் போல் விளையாடி வாழைப்பழம் மாம்பழம் போன்றவைகளை கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தது.

    தினமும் காலையில் இவரை தேடி வரும் குரங்குகள் மாலையில் வனப்பகுதிக்குள் சென்று விடும். சக மனிதனுடன் அன்பு பாராட்டுவது குறைந்துவரும். இந்த சூழ்நிலையில் குரங்குகளின் மீது அன்பை செலுத்தி வந்த முதியவர் ராமலிங்கம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா கோரப்பிடியில் சிக்கி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உயிரிழந்தது தெரியாமல் இன்று காலை அவரை தேடி வந்த குரங்குகள் கூட்டம் அவர் இன்னும் வரவில்லை என மரங்களின் மீது கூச்சலிட்டு வருகின்றது.


    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மற்றும் 47 வயதுடைய அவரது மனைவி ஆகியோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனை முடிவில் கணவன்-மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    ஆனால் அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆணின் தாய், சித்தப்பா, சித்தி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த 4 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கூட்டு குடும்பமாக வசித்த 5 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் மற்றும் அவருடைய 47 வயது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கணவன்- மனைவி இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் நேற்று பரிதாபமாக இறந்தனர்.

    ஏற்கனவே நேற்று முன்தினம் அந்த ஆணின் தாயும், அவருடைய சித்தப்பா, சித்தி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டு குடும்பமாக வசித்த அவர்கள் 5 பேரும் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது.
    ஈரோடு:

    தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது 6 ஆயிரத்து 558 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மேலும் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் 120 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், 499 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை மேற்கொள்வதற்காகவும், தொற்று உள்ளவர்கள் சிகிச்சை மேற்கொள்வதற்காகவும் தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீடுகளில் கழிவறையுடன் கூடிய தனி அறையில் தனிமைப்படுத்தி கொள்ள இயலாத சூழ்நிலையில், மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவல் ஏற்படுவது தடுக்கப்படும்.

    எனவே, நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது. அவ்வாறு வருவது கண்டறியப்பட்டால், அருகில் உள்ள பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் கீழ்கண்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை 04241077, 04242260211, 9791788852 ஆகிய எண்களில் உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும், தகவல் தெரிவிக்கும் தனிநபர்களின் விவரங்கள் ஏதும் வெளியிடப்பட மாட்டாது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு மாவட்டத்தில் 120 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், தொற்றால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 558 பேர் வீட்டு தனிமையிலும் உள்ளனர்.
    ஈரோடு:

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிட பணிகளை, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாமல் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வருவதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது.

    இதனால், மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 300 படுக்கைகளுடன் கூடிய கட்டிடத்திற்கான பணிகளும், ரோட்டரி சங்கம் சார்பில் 400 எண்ணிக்கையிலான கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய கட்டிடமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, இதுவரை 6 லட்சத்து 34 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகள், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தற்போது 2 ஆயிரத்து 185 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் 120 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், தொற்றால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 558 பேர் வீட்டு தனிமையிலும் உள்ளனர். எனவே, அனைத்து தரப்பு மக்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடித்தால் மட்டுமே, இந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் முழுமையான வெற்றி பெற முடியும்.

    இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
    வி.சி.டி.வி. சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடை, வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள ஒரு பழக்கடை, கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு எண்ணெய் கடை ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது கண்டுபிடிக்கப்பட்டது.
    ஈரோடு:

    இன்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் நேற்றைய தினம் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்களும் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதால், பெரும்பாலான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்கள். இதில் வி.சி.டி.வி. சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடை, வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள ஒரு பழக்கடை, கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு எண்ணெய் கடை ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றார்கள். இதையடுத்து அந்த 3 கடைகளுக்கும் சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் வெளி ஊர்களில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக நேற்று மாலை முதல் இன்று மாலை வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு எவ்வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையில் வெளி ஊர்களில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக நேற்று மாலை முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு, பள்ளிபாளையம், பவானி, கோபி, அந்தியூர், சத்தி, பெருந்துறை உள்ளிட்ட கிளைகளில் இருந்து நேற்று மாலை 30 அரசு பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.

    குறிப்பாக மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், நெல்லை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்றன. இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்ட பஸ்களில் 10-க்கும் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் டவுன் பஸ்களும் இயக்கப்படும் என்றும், பயணிகளின் கூட்டத்தை பொருத்து வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    பெருந்துறையில் புதிய படுக்கைகளுடன் தயாராகும் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.
    ஈரோடு:

    பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வார்டுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆக்சிஜன் வசதியுடன் சுமார் 700 கூடுதல் படுக்கைகளுடன் 2 வார்டுகளாக இந்த புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. தனியார் நிறுவன தொழில் அதிபர்கள் நிதி உதவி மற்றும் ரோட்டரி சங்க உதவியுடன் இந்த பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு வார்டுக்கான கட்டமைப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்து வருகின்றன. இங்கு புதிய கட்டில்கள் மற்றும் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று பார்வையிட்டார்.

    அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

    இதுபோல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொண்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் மருத்துவ பணிகள் குறித்தும் அமைச்சர் சு.முத்துசாமி கல்லூரி முதல்வர் டாக்டர் மணி மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
    ×