என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி திருவீதி உலா நடைபெற்றது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி திருவீதி உலா நடைபெற்றது.
சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 8&ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து அன்று இரவு அம்மன் சப்பரம் சிக்கரசம் பாளையத்தில் எழுந்தருளியது. பின்னர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கரசம் பாளைத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து இரவு புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) புதூர் கிராமத்தில் இருந்து புறப்பட்டு அம்மன் சப்பரம் மதியம் வெள்ளியம்பாளையம் கிராமத்திற்கு வந்தடைந்து அங்கு திருவீதி உலா நடைபெற்றது. கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தயிர்பள்ளம், நெரிஞ்சிபேட்டை, கொத்தமங்கலம், பழைய கொத்தமங்கலம் (பரிசல்துறை), பகுடுதுறை, முடுக்கன் துறை வழியாக வந்து இரவு 8 மணிக்கு தொட்டம்பாளையம் சென்றடைந்து அங்குள்ள அரங்கநாதர் கோவிலில் அம்மன் சப்பரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதனைத்தொடந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை தொட்டம்பாளையம் கிராமத்தில் திருவீதி உலா நடைபெறும்.
பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.37 அடியாக குறைந்துள்ளது.
பவானிசாகர்:
பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.37 அடியாக குறைந்துள்ளது.
பவானிசாகர் அணை. நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 91.37 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 294 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் 2,300 கன அடி என மொத்தம் 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
ஈரோடு:
கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் கூடிய சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் சூடு பிடித்தது. ஆனால் இன்று கூடிய சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து இருந்தாலும் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.
இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பூர் பகுதியில் உள்ள கோவில் திருவிழா நடந்து வருவதால் பெரும்பாலான மாடுகள் அங்கு சென்று விட்டன. இதனால் இன்று கருங்கல் பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.
இன்று 350 பசுமாடுகள், 250 எருமை மாடுகள், 100 கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனது. பசு மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது.
ஈரோடு அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
ஈரோடு, மார்ச்:
ஈரோடு அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
ஈரோடு கீரக்காரவீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 8-ந் தேதி அக்னி கபாலம் நிகழ்ச்சியும், அம்மனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரமும் நடப்பது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு குண்டம் பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. முதலில் கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கிய தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை அங்காள பரமேஸ்வரிக்கு மாவிளக்கு படைத்தல், இரவு திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.
கடந்த பல மாதங்களுக்குப்பின் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.10 ஆயிரம் கடந்தும், சராசரியான விலை 9,500-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மாநில தலைவர் பி.கே.தெய்வ சிகாமணி கூறியதாவது:&
ஈரோடு பகுதி மஞ்சள் மார்க்கெட்டில் கடந்த பத்து நாட்களாக விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரம் முதல் ரூ. 10,500 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9,500 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த கட்டுபடியான விலை தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டு மஞ்சள் விலை மிகவும் விலை குறைந்து ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து போனது.
அதனால் விவசாயிகள் அதிகமாக மஞ்சளை பயிரிடவில்லை. அதனால் உற்பத்தி குறைந்தது. உற்பத்தி குறைவால் விலை சற்று உயர்ந்து காணப் படுகிறது. இதுவும் பெரிய லாபகரமான விலை இல்லை.
இந்தாண்டு மிகுதியாக மழை பெய்துள்ளது. நீர் வளம் உள்ளது.
இதை பயன்படுத்தி அதிகப் படியான விவசாயிகள் மஞ்சளை பயிர் செய்தால் இந்த விலை குறைப்பது சாத்தியமாகாது என நினைக்கிறோம்.
எதிர்காலத்தில் இந்த விலை தொடர நடப்பு பருவத்தில் விவசாயிகள் எவ்வளவு பரப்பில் மஞ்சளை சாகுபடி செய்துள் ளார்களோ அதே அளவே மஞ்சளை பயிரிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதைவிட கூடுதல் பரப்பில் சாகுபடி செய்தால் விலை வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகும்.
மஞ்சள் பயிர் செய்த நிலத்தில் அடுத்தாண்டு மஞ்சளை பயிரிட முடியாது. நிலத்தை மாற்றி மாற்றி பயிர் செய்யும் பயிராக மஞ்சள் உள்ளதால் அதற்கேற்ப மாவட்ட நிர்வாகம் மூலம் திட்டமிட்டு, அதிகப் படியான பரப்பில் மஞ்சளை பயிரிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னிமலை&ஈங்கூர் ரோட்டில் ஆர்.டி.ஓ. திடீர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
பெருந்துறை:
சென்னிமலை-ஈங்கூர் ரோட்டில் ஆர்.டி.ஓ. திடீர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
பெருந்துறை வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், கதிர்வேல் ஆகியோர் நேற்று மாலை சென்னிமலை-ஈங்கூர் ரோட்டில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேன் வந்தது. இதை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வேனுக்கு சாலை வரி ரூ. 96 ஆயிரம் கட்டாமல் இயக்கி வருவது தெரிந்தது. அதை தொடர்ந்து அந்த வேனை பறிமுதல் செய்து பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும், ஏர் ஹாரன் பொறுத்தி வாகனங்கள் இயக்கியது, அதிக பாரம் ஏற்றிவந்தது, ஸ்டிக்கர் ஒட்டாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 10 வாகனங்களுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பெருந்துறை அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறையை அடுத்துள்ள மணியம் பாளையம் குட்டைய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 56). விவசாயியான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் தினமும் அதிகாலை பெருந்துறை தினசரி மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். அதே போல் இன்று அதிகாலை 2 மணியளவில் பெருந்துறை மார்க்கெட்டுக்கு வருவதற்காக தனது மொபட்டில் பெருந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஓலப்பாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது ரோட்டை கடக்க முயன்றார். அப்பொழுது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக சாமியப்பன் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் காலில் பலத்த அடிபட்ட சாமியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி அடுத்து மயிலம்பாடி வாய்க்கால் பாளையம், மேல் காலனி பகுதியை சேர்ந்தவர் அருண் (25). ஆட்டோ டிரைவர்.
இவருடைய மனைவி வசந்தி. சம்பவத்தன்று அருண் இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் மயிலம்பாடியில் இருந்து கண்ணாடி பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அருண் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருக்கு தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானி இன்ஸ்பெகடர் பொன்னம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
சூர்யா படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. ஜெய்பீம் படம் சர்ச்சையை தொடர்ந்து சூர்யா படத்தை தியேட்டர்களில் வெளியிட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் வெளியிட கூடாது என கடிதம் வந்துள்ளது.
இதனால் சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேப்போல் சூர்யா படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 38 தியேட்டர்கள் உள்ளன. மாநகர் பகுதியில் 12 தியேட்டர்கள் உள்ளன. இதில் நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மாவட்டம் முழுவதும் 26 தியேட்டர்களில் இன்று ரிலீசானது.
மாநகர் பகுதியில் 5 தியேட்டர்களில் இன்று ரிலீஸ் ஆனது. படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தியேட்டரிலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு அண்ணா தியேட்டரில் இன்று காலை 5 மணிக்கு ரசிகர் ஷோ திரையிடப்பட்டது. அதிகாலை முதலே சூர்யா ரசிகர்கள் தியேட்டரில் திரண்டனர். பட்டாசு வெடித்தும் மேளம் தாளங்கல் உடன் தியேட்டருக்கு வந்தனர். பின்னர் ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி கேக் வெட்டி கொண்டாடினர்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள தியேட்டரில் இன்று காலை 9.30 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
இதேபோல் கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை, பவானி உள்பட மாவட்டம் முழுவதும் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி கோழிப்பண்ணை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ரங்கநாதன் (21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2 -ம் ஆண்டு படித்து வந்தார்.
கொரோனா காலகட்டத்தில் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் சிகிச்சைக்கு பிறகு தற்போது தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் மாணவர் ரங்கநாதன் வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரிடம் பெற்றோர் கேட்ட போது தான் வயிறு வலி அதிகமாக இருந்ததால் எலிபேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்து விட்டார். இது குறித்து புஞ்சை புளியம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் மதுபாட்டில்கள் திருடிய விற்பனையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரத்தில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சண்முகம், அருள்ராஜ், சரவணன், மாரிமுத்து ஆகியோர் விற்பனையாளராகவும், விண்ணப்பள்ளியை சேர்ந்த சந்திரன் என்பவர் மேற்பார்வையாளராகவும் வேலைப்பார்த்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகம் பணியில் இருந்தார். பின்னர் இரவு வேலை நேரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் மறுநாள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதுப்பற்றி விற்பனையாளர் சண்முகம் கடத்தூர்போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு கோபி டி.எஸ்.பி.ஆறுமுகம் மற்றும் கடத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருப்புகளை ஆய்வுசெய்த போது 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டிகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.கேமிராக்கள் மற்றும் வயர்கள் அறுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடையின் விற்பனையாளர் சண்முகம் விற்பனை முடிந்ததும் கடையை பூட்டி சென்றதும், பின்னர் நள்ளிரவில் விற்பனையாளர் சண்முகம் மற்றொரு நபருடன் வந்து மதுக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் விற்பனையாளர் சண்முகத்தை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த மற்றொரு நபரையும் தேடிவருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு போலீஸ் நிலையங்களில் அப்துல் சலீம் மீது 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (66). இவர் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திண்டலில் இருந்து ஆனைக்கல்பாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூலப்பாளையம் பூந்துறை ரோடு பகுதியில் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும் நகைகளை அணிந்து செல்வதற்கு உரிய ஆவணம் உள்ளதா? என்று கேட்டு மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்த நபர் நைசாக பேசி குழந்தைவேலு அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (73) என்பவர் தனது உறவினரை பார்ப்பதற்காக ஈரோடு கொல்லம்பாளையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் திரும்பி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் நின்ற ஒரு நபர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வனத்துறை அதிகாரி என்று மிரட்டி சுப்பிரமணியத்திடம் இருந்து ஒரு பவுன் மோதிரத்தை பறித்து தப்பி சென்றார்.
இதேபோல் எழுமாத்தூர்காட்டுவலசு பகுதியை சேர்ந்த மணி (55). இவர் நிலகடலை வியாபாரி என்பதால் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஒரு லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நபர் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.1 லட்சத்தை பறித்து விட்டு சென்றார். 3 சம்பவங்களிலும் ஈடுபட்டவர் ஒரே நபர் என போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டு அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.போலீஸ் விசாரணையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம், காமராஜர் நகரைச் சேர்ந்த அப்துல் சலீம் (65) என்பது தெரிந்தது.
இந்நிலையில் அப்துல் சலீம் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அப்துல் சலீமை கைது செய்தனர்.
பின்னர் அவர் விசாரணைக்காக ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்டார். போலீசாரின் விசாரணையில் அப்துல் சலீம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
திருப்பூர்மாவட்டம் பல்லடம் காமராஜர் நகர் தான் அப்துல் சலீம் சொந்த ஊராகும். இவருக்கு 2 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர். அப்துல்சலீம் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஜீப் டிரைவராக சில நாட்கள் வேலை பார்த்தார். பின்னர் அவர் அந்த வேலையிலிருந்து நின்று விட்டார். இருந்தாலும் போலீசார் ஏவ்வாறு பேசுவார்கள் அவர்களின் நடை உடை பாவனை ஆகியவற்றை தெரிந்து கொண்டார்.
பின்னர் எந்த வேலைக்கும் செல்லாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறி பலரிடம் பணம், நகையை பறித்துள்ளார். இவ்வாறு திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு போலீஸ் நிலையங்களில் அப்துல் சலீம் மீது 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் இவர் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பலரிடம் கைவரிசை காட்டி யுள்ளார். கோபியில் இவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் ஈரோட்டை சேர்ந்த குழந்தைவேல் என்பவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோதிரத்தை பறித்துள்ளார்.
அப்துல் சலீமிடம் இருந்து நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்துல் சலீம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர் கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.