என் மலர்
ஈரோடு
கோபிசெட்டிபாளையத்தில் ஓட்டல் கடைக்காரர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையத்தில் ஓட்டல் கடைக்காரர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இரவு நேர ஓட்டல் கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் மொபட்டில் மொடச்சூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஈரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பூரணசந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதில் முதற் கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 85,601 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த மாணவ&மாணவிகளுக்கு 2&வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய 64 ஆயிரத்து 783 மாணவ&மாணவிகளுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேப்போல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 16 லட்சத்து 30 ஆயிரத்து 899 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 90.15 சதவீதமாகும்.
2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை மாவட்டத்தில் 12 லட்சத்து 77 ஆயிரத்து 333 பேர் செலுத்தியுள்ளனர். இது 70.61 சதவீதமாகும். 2 தவணை தடுப்பூசிகளையும் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 8 ஆயிரத்து 232 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முதல் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று 2&-வது நாளாக அந்தந்த பள்ளிகளில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
சென்னிமலை அருகே காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்மடைந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்மடைந்தனர்.
சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் ஊராட்சி 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (24). இவர் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது நண்பர் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கே.கே. நகரில் வசித்து வருகிறார். நண்பர் வீட்டுக்கு அய்யப்பன் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது நண்பரின் வீடு அருகே வசித்து வந்த சவுந்தர்யா தேவி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சவுந்தர்யா தேவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
சென்னிமலை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி இரு தரப்பு பெற்றோரையும் வரவ ழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சவுந்தர்யா தேவியின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளாததால் அய்யப்பனின் பெற்றோர் காதல் ஜோடியை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.
சென்னிமலை:
பங்குனி உத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை காலை தேரோட்டம் நடக்கிறது/
மலைகளில் தலையாய மலையாக போற்றப்படும் சென்னிமலை மலை மீது குமரக் கடவுள் பாலதண்டாயுதமூர்த்தம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினமும் படி வழியாக முருகப்பெருமானுக்கு எருதுகள் மூலம் திருமஞ்சனம் (தீர்த்த குடம்) கொண்டு செல்வது தனிச்சிறப்பு.
இங்கு தைப்பூச தேர் மற்றும் பங்குனி உத்திர தேர் என தனித்தனியாக இரண்டு பெரிய தேர் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கோரோனா பெருந் தொற்று பரவலால் தேரோட்டம் நடைபெறவில்லை.
இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பங்குனி உத்திரவிழா நேற்று மலை மேல் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தனர்.
கொடியேற்றத்திற்கு முன் முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவர்க்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தலைமைக்குருக்கள் ஸ்ரீ லஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்ய சேவல் கொடியை ஏற்றி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தனர். பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இன்று இரவு நடக்கிறது, தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.20 மணிக்கு நடக்கிறது, மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும், 19-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி காலை மகாதரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்சியுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8மணி நிலவரப்படி 89.15 கன அடியாக இருந்தது.
பவானிசாகர் அணை நீர்மட்டம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8மணி நிலவரப்படி 89.15 கன அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1132 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 200 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி வீதமும், கீழ்பவானி வாய்க்காலில் 2380 கன அடியும் என மொத்தம் 3080 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த 7 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த 7 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலக இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர் மற்றும் கதிர்வேல் ஆகியோர் நேற்று மாலை சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோட்டில் வாகனங்களை தணிக்கை செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். ஆவணங்களை சரிபார்த்தபோது கடந்த ஒரு வருடமாக அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதனால் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து பெருந்துறை ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஓட்டிச் சென்றனர்.
மேலும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர் மேலும், இவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி உள்பட ஜேசிபி வாகனம் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஏர் ஹாரன் பயன்படுத்தியது அதிக பாரம் ஏற்றயது, முறையான ஆவணங்கள் இல்லாதது ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அந்தியூர் அருகே மது விற்பனை செய்த 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அந்தியூர் அருகே மது விற்பனை செய்த 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் மது பாட்டிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
அப்போது செம்புளிசாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (72) என்பவர் 40 பாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவர் 28 பாட்டில்களும் பையில் போட்டு வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு 22-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் கிருஷ்ணனுன்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு 22-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் கிருஷ்ணனுன்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது.
சுமார் 2 வருடங்களுக்கு பிறகு குண்டம் விழா நடப்பதால் விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 22-ந் தேதி குண்டம் விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து குண்டம் இறங்குகிறார்கள்.
குண்டம் நாளான வரும் 22-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தால், இந்த விடுமுறை பொருந்தாது. முன்கூட்டியே தேர்வுகள் அறிவித்தபடி நடக்கும்.
இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் வரும் 26&ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது. விடுமுறை நாளில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கருவூலம், சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியா ளர்களுடன் செயல்படும்.
வரும், 21, 22, 23 ஆகிய நாட்களில் கோவிலில் குண்டம் மற்றும் மறுபூஜை நடக்க உள்ளது. இதனால் அந்நாட்களில் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, மைசூரு, நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு பஸ்களை பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கிரேன் டிரைவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கிரேன் டிரைவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பழைய வத்தலக்குண்டு கிழக்கு வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது25). இவரது மனைவி சவுந்தர்யா.
கணவன்&மனைவி இருவரும் ஈரோடு பெருந்துறை ரோடு செங்கோடம்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். விக்னேஷ் கிரேன் டிரை வராக வேலை பார்த்து வந்தார். சவுந்தர்யா தற்போது 8 மாத கர்ப்பி ணியாக உள்ளார்.
இந்நிலையில் உடல் பரிசோதனை செய்வ தற்காக சவுந்தர்யா பழைய வத்தலக்குண்டுக்கு சென்றார். பின்னர் உடல் பரிசோதனை முடித்து கொண்டு கடந்த 15-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் கணவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. விக்னேஷ் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து சவுந்தர்யா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தன் கணவரை மீட்டுத்தர வேண்டும் என புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை தேடி வருகின்றனர்.
பவானி அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி அருகே உள்ளது திருவள்ளுவர் நகர் 7-வது வார்டு பகுதி. இங்கு கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். மேலும் இதே பகுதியில் அரசு மாணவர்கள் விடுதி மற்றும் கோவில் ஆகியவையும் உள்ளது.
திருவள்ளுவர் நகரை சேர்ந்த பெண்கள் பல்வேறு ஊர்களில் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் வீட்டுக்கு திரும்புவார்கள்.
இந்த நிலையில் பவானி- அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் குடிமகன்கள் சிலர் மது பாட்டில்களை வாங்கி கொண்டு திருவள்ளுவர் நகர் பகுதியில் பெண்கள் செல்லும் சாலையில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர்.
மேலும் குடிபோதையில் அந்த வழியாக செல்லும் பெண்களையும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் நேற்று இரவும் குடிமகன்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து இரவு 9 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் பெண்களை மது குடிப்பவர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்றனர்.
இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டு புள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு யுவராணி, மலர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் மலர் (19) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மாணவி மலர் அதிக முன்கோபம் உள்ளவர் எனவே யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று சீனிவாசன் தனது சித்தப்பாவின் மகன் திருமண நிகழ்ச்சிக்காக பர்கூர் செல்வதற்காக மலரை பள்ளிக்கு செல்ல வேண்டாம் எங்களுடன் வா என கூறி உள்ளார். அதற்கு மலர் நான் வரவில்லை என கூறிவிட்டு கோபித்து கொண்டு சென்று விட்டார்.
இந்நிலையில் கோபத்தில் இருந்த மலர் வீட்டில் உள்ள ஒரு அறையின் உள்ளே சென்று தாழிட்டு கொண்டார்.
இதையடுத்து அவரது அக்காள் யுவராணி மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். ஆனால் மலர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்த போது மலர் சேலையால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மலரை மீட்டு கோட்டுபுள்ளம் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மலர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது.
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படு த்தியது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர் களுக்கும், பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக் கப்பட்டு செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 45 வயது தாண்டிய அனை வருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பின்னர் 18 வயது தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி ஒரு பங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் 3-ம் அலை உருவாகி வேகமாக பரவியது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் காரணமாக 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் முதற் கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கும் நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு 2-ம் தவணைத் தடுப்பூசியும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12 முதல் 14 வயது உடைய சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வயது உடைய சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் 12 வயது முதல் 14 வயதுக் குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66,300 பேர் உள்ளனர். இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங் கியுள்ளது.
இன்று முதல் தினமும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் செலுத்தப்பட்டு வரும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டு சில மணி நேரம் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தனர். 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.