என் மலர்tooltip icon

    ஈரோடு

    அத்தாணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை ெசய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆப்பக்கூடல்:

    அத்தாணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை ெசய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி அருகேயுள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (எ) கருப்புசாமி (61), இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இதனால் மருத்துவமனையில் சின்னசாமி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார், எனினும், இடுப்பு பகுதியில் உள்ள காயத்தில் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் சம்பவத்தன்று இரவு சின்னச்சாமி பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கினார்.

    இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மா பேட்டை அருகே செம்முனீஸ்வரர் கோவில் விழாவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அம்மாபேட்டை:

    அம்மா பேட்டை அருகே செம்முனீஸ்வரர் கோவில் விழாவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் உள்ளது. 

    இக்கோவிலின் வருடாந்திர திருவிழா சித்திரை மாதம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றப்பட்டு பூச்சாட்டு விழா தொடங்கியது. 25-ந் தேதி ஆயக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து செம்முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

    நேற்று வெள்ளிக்கிழமை  பூசாரியூர் மடப்பள்ளியில் இருந்து செம்முனீஸ்வரர், மன்னாத சுவாமி, பச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊர்வலமாக வனக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

    அதைத்தொடர்ந்து வனக் கோவிலில் அமைந்துள்ள செம்முனீஸ்வரர் உட்பட அனைத்து பரிவார சிலைகளுக்கும் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மீண்டும் சாமிக்கு பல்வேறு ஆராதனை பூஜைகள் நடைபெற்ற பின் பூசாரி மற்றும் பக்தர்கள வாணவேடிக்கையுடன் குட்டிப்பாறை எனும் இடத்திற்கு சென்று பூசாரி ஆட்டுக்கிடாய் குட்டிக்கு பூஜை செய்து தீர்த்தம் தெளித்தார். 

    ஆட்டுக்கிடாய் துளுக்கிய பின் அதனை முறைதாரர்கள் சாமிக்கு பலி கொடுத்தனர். பின்னர் ஆட்டுக்கிடாய் ரத்தத்தை குடிக்கும் முறை தாரர்கள் ஆட்டுக்குட்டியின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்தனர்.அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக நின்று தாங்கள் கொண்டுவந்த 3 ஆயிரம் ஆட்டுக்கிடாய்களை செம்முனீஸ்வரருக்கு பலி கொடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். 

    இந்த விழாவில் கர்நாடக மாநில பக்தர்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

     இரவு 8 மணிக்கு செம்முனீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இன்று சனிக்கிழமை காலை வனக்கோவிலில் இருந்து முனீஸ்வரர் மன்னாதசாமி பச்சையம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலை மீண்டும் மடப்பள்ளிக்கு சென்று விழா நிறைவுபெறும்.

    கோபிசெட்டிபாளையத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டார். 

    கோபிசெட்டி பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புைகயிலை பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கோபி செட்டிபாளையம் ஈரோடு ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் கட்டை பையுடன் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    அவர் போலீசாரை கண்டதும் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

     மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோபி செட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் (43) என்பதும், மொடச்சூர் பகுதியை சேர்ந்த சூசை மாணிக்கம் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய வாங்கி கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து போதை பாக்குகள்,   புகையிலை என மொத்தம் 4 கிலோ 410 கிராம் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகணேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பங்களாப்புதூர் அருகே குடி போதையில் ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் அருகே குடி போதையில் ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது27). கட்டிட தொழி லாளி. இவருக்கு திருமண மாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், தியான வர்ஷசன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி கணவரை பிரிந்து மகன் விக்னேஸ்வரனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள பெரியாண்டவர் கோவில் திருவிழா நடப்பதால், விக்னேஸ்வரன் வீட்டை சுத்தம் செய்தார். தொடர்ந்து அவர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி சங்கிலிமடுவு பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளித்து  கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக விக்னேஸ்வரன் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
    சத்தியமங்கலம் அருகே இன்று காலை விபத்தில் 2 வாலிபர்களை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்தவர் அஜித் (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் (23). இவர்கள் 2 பேரும் மேலும் 4 நண்பர்களுடன் கிருஷ்ணகிரியில் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் கோவை மாட்டத்தில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர்.

    அவர்கள் இன்று காலை 7.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி ஒரு பிக்கப் வேன் வந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அருண், அஜித் வந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் பயங்கரமாக மோதியது.

    இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே நண்பர்கள் கண் முன்னால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதை பார்த்த நண்பர்கள் கதறி அழுதனர். மேலும் இது பற்றி தெரிய வந்நததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிக்கப்வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி கோகிலா (38). இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம்போல் கோகிலா தனது கணவரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

    பின்னர் மீண்டும் வீடு திரும்பிய கோகிலா குளத்துப்பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் தான் கொண்டு வந்த சாணி பவுடரை குடித்தார். பின்னர் இதுகுறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.

    அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் ஜெயவேல் பதறி அடித்துக்கொண்டு குளத்துப்பிரிவு பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்று அங்கு மயக்க நிலையில் இருந்த கோகிலாவை மீட்டு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது கோகிலாவின் உடல்நிலை மோசமடைந்ததால் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும்வழியிலேயே கோகிலா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து கோகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை அருகே குடும்ப தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காஞ்சி கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அடுத்த பள்ளபாளையம், குண்டுமல்லநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன குப்ப நாயக்கர் (57). இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களது மகன் தங்கராசு.

    இந்நிலையில் தங்கராசுக்கு திருமணமாகி தாய், தந்தை வசிக்கும் பக்கத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். தங்கராசு மனைவிக்கு கருசிதைவு ஏற்பட்டு தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் தங்க ராசுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் பெற்றோர்கள் இருவரும் மனவேதனையுடன் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம்போல் தங்கராசு தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்த சின்னகுப்பநாயக்கர், பொன்னம்மாள் ஆகியோர் விஷம் குடித்து மயங்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரல் வாழவல்லான்பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி உலகம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகளும் உள்ளனர்.

     இதில் 3-வது மகள் சங்கீதா (27) ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியின் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    அப்போது பக்கத்து ஊரான கோட்டுபுள்ளா ம்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2015-ம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவிற்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதாவை வேல்முருகன் அடிக்கடி சந்தேகப்பட்டு பேசி வந்துள்ளார். இதனால் 4 வருடத்திற்கு முன்பு சங்கீதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

    பின்னர் அவர் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் சங்கீதாவின் மாமியார் ஈஸ்வரியும் மற்றும் கணவர் வேல்முருகன் ஆகியோர் சங்கீதாவை திட்டி வந்துள்ளனர். 

    இதுகுறித்து சங்கீதா தனது தாயிடம் போனில் கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை வேல்முருகன் தனது மாமியாருக்கு போன் செய்து உங்களது மகள் தூக்கு போட்டு கொண்டார். 

    கோபி அரசு மருத்துவமனையில் அவரது உடல் உள்ளது என்று கூறிஉள்ளார். இதையடுத்து உலகம்மாள் பதறியடித்துக்கொண்டு கோபி அரசு மருத்துவ மனையில் சென்று தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இது குறித்து அவர் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அதன்பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
    டி.என்.பாளையம் அருகே மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர் காந்தி வீதியை சேர்ந்தவர் வசந்த் (23). கடந்த 9-ந்தேதி வாணிப்புத்தூர் ராமர்கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் நடந்து உள்ளது.

    அப்போது கோபி நஞ்சகவுண்டன் பாளையம் பாரியூர் ரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான நந்தகுமார் (24) திருவிழாவில் தனது மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.

    திருவிழாவிற்கு வந்த வசந்த் இதை தட்டி கேட்ட போது நந்தகுமார் தகாத வார்த்தைகளால் வசந்தை திட்டியுள்ளார், அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

    இதனையடுத்து கடந்த 12-ந்தேதி வசந்த் தனது வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார், அன்று இரவு 11.30 மணியளவில் வீட்டின் வெளியே பெட்ரோல் வாடை வீசியதால் வசந்த் வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது, இதையடுத்து வசந்த் விசாரித்ததில் நந்தகுமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து வசந்த், நந்தகுமாரிடம் தனது மோட்டார் சைக்கிளை எதற்காக எரித்தாய் எனவும், புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித்தர கேட்டபோது உனது மோட்டார் சைக்கிளை எரித்தது போல் உன்னையும் எரித்து விடுவேன் என்று நந்தகுமார், வசந்த்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து முன்தினம் வசந்த், நந்தகுமார் மீது பங்களாப்புதூர் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து நந்தகுமார் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஆப்பக்கூடல் அருகே வேன் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே வேன் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 32), வேன் டிரைவர்.சம்பத்தன்று முனுசாமி மோட்டார் சைக்கிளில் ரைஸ்மில் பிரிவில் இருந்து கூத்தம்பூண்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முனியப்பன் கோவில் வளைவு அருகே முனுசாமி வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கூத்தம்பூண்டி புடவைக்காரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த கணேஷ் பாபு (21) என்பவர் முனுசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியுள்ளார்.

    இந்த விபத்தில் படுகாய மடைந்த முனுசாமியை அருகில் இருந்தவர்்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்த முனுசாமி உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட கணேஷ்பாபுவை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

    அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றப்பட்டு பூச்சாட்டு விழா தொடங்கியது. 25-ந் தேதி ஆயக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து 28-ந் தேதி சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து செம்முனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. 

    இன்று காலை சுமார் 11 மணி அளவில் மடப்பள்ளியில் இருந்து செம்முனீஸ்வரர், மன்னாதசாமி, பச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊர்வலமாக வனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

    அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் அங்குள்ள சாமி சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கார ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து வனக் கோவிலிருந்து பூசாரி மற்றும் பக்தர்கள் புடைசூழ குட்டி பாறை எனும் இடத்திற்கு சென்று பூசாரி ஆட்டுக்கிடாய்க்கு பூஜை செய்து தீர்த்தம் தெளிப்பார். ஆடு துளுக்கிய பின் முறைதாரர்களால் முதல் கிடாய் வெட்டப்படும். 

    அதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனுக்காக கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள்  ஒவ்வொன்றாக வெட்டி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு செம்மு னீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் நாளை செம்மு னீஸ்வரர் வனக் கோவிலில் இருந்து மடபள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து செல்வர். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    பெருந்துறை அருகே வட மாநில சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே வட மாநில சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாகாணம், துர்காபூரில் பைலனி என்ற பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் தாஸ். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு பூர்ணிமா தாஸ் என்ற மகளும், ராகேஷ் தாஸ் (வயது 12)  என்ற மகனும் உள்ளனர்.

    இவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பெருந்துறையை அடுத்துள்ள கரண்டிபாளையத்தில் உள்ள ஒரு தேங்காய் நார் மில்லில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் அதே பகுதியில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் 2 குழந்தைகளையும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கலாம் என்றும், இவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் தான் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை, இங்காவது பள்ளிக்கு செல்லட்டும் என்று மாலதி தனது கணவரிடம் கூறியுள்ளார்.

     இந்நிலையில் நேற்று காலை மாணிக்க தாஸ் வீட்டில் சாப்பிட வந்தவர் மகன் ராகேஷ் தாஸ் சாப்பிட மறுத்ததால், அவனை திட்டி விட்டு மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்.

    மதியம் வீடு பூட்டி இருப்பதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள்  தெரிவித்ததை தொடர்ந்து மாணிக்கம் தாஸ் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஷ் தாஸ் துப்பட்டாவில் ஜன்னலில் தூக்குமாட்டி தொங்கி க்கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே ராஜேஸ் தாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தகவலறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    ×