என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவர் கைது
கோபிசெட்டிபாளையத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
கோபி:
கோபிசெட்டிபாளையத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
கோபிசெட்டி பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புைகயிலை பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கோபி செட்டிபாளையம் ஈரோடு ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் கட்டை பையுடன் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
அவர் போலீசாரை கண்டதும் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோபி செட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் (43) என்பதும், மொடச்சூர் பகுதியை சேர்ந்த சூசை மாணிக்கம் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய வாங்கி கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து போதை பாக்குகள், புகையிலை என மொத்தம் 4 கிலோ 410 கிராம் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகணேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story