என் மலர்
உள்ளூர் செய்திகள்

முனுசாமி.
வேன் டிரைவர் விபத்தில் பலி
ஆப்பக்கூடல் அருகே வேன் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே வேன் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 32), வேன் டிரைவர்.சம்பத்தன்று முனுசாமி மோட்டார் சைக்கிளில் ரைஸ்மில் பிரிவில் இருந்து கூத்தம்பூண்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது முனியப்பன் கோவில் வளைவு அருகே முனுசாமி வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கூத்தம்பூண்டி புடவைக்காரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த கணேஷ் பாபு (21) என்பவர் முனுசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியுள்ளார்.
இந்த விபத்தில் படுகாய மடைந்த முனுசாமியை அருகில் இருந்தவர்்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த முனுசாமி உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட கணேஷ்பாபுவை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






