என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வட மாநில சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்29 April 2022 3:08 PM IST (Updated: 29 April 2022 3:08 PM IST)
பெருந்துறை அருகே வட மாநில சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே வட மாநில சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாகாணம், துர்காபூரில் பைலனி என்ற பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் தாஸ். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு பூர்ணிமா தாஸ் என்ற மகளும், ராகேஷ் தாஸ் (வயது 12) என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பெருந்துறையை அடுத்துள்ள கரண்டிபாளையத்தில் உள்ள ஒரு தேங்காய் நார் மில்லில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் அதே பகுதியில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் 2 குழந்தைகளையும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கலாம் என்றும், இவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் தான் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை, இங்காவது பள்ளிக்கு செல்லட்டும் என்று மாலதி தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை மாணிக்க தாஸ் வீட்டில் சாப்பிட வந்தவர் மகன் ராகேஷ் தாஸ் சாப்பிட மறுத்ததால், அவனை திட்டி விட்டு மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்.
மதியம் வீடு பூட்டி இருப்பதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மாணிக்கம் தாஸ் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஷ் தாஸ் துப்பட்டாவில் ஜன்னலில் தூக்குமாட்டி தொங்கி க்கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேஸ் தாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×