என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • இரவிலும் அவர்கள் தொடர்ந்து ஊருக்குள் சுற்றி வந்ததால் இன்று அதிகாலை அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
    • இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தங்கள் நண்பருக்கு திருமணம் செய்து வைக்க கடத்திச் செல்ல வந்ததாக தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு, வாகனங்களில் பேட்டரிகள் திருட்டு ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வந்தன. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க உள்ளூர் இளைஞர்கள் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் சுக்காம்பட்டி அய்யர் கலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அப்பகுதியில் சுற்றி வந்தனர். அவர்கள் உள்ளூர் இளைஞர்கள் இல்லை என்பதை உறுதி செய்த பொதுமக்கள் இரவு வரை அவர்களை கண்காணித்த னர். இரவிலும் அவர்கள் தொடர்ந்து ஊருக்குள் சுற்றி வந்ததால் இன்று அதிகாலை அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    மேலும் தர்ம அடி கொடுத்து வடமதுரை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 24), புதுக்கோட்டை மாவட்டம் மேலஸ்தானம் பகுதியைச் சேர்ந்த ஹரி ஹரன் (24), தஞ்சையைச் சேர்ந்த அசோக்குமார் (35), திருவாரூர் மாவட்டம் பாலகுடியைச் சேர்ந்த அஜித்குமார் (25) என தெரிய வந்தது.

    அவர்கள் இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தங்கள் நண்பருக்கு திருமணம் செய்து வைக்க கடத்திச் செல்ல வந்ததாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்து உரிய விசாரணை நடத்துமாறு கூறினர்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவத்தால் அய்யலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலை பராமரிப்பு காரணமாக பயணிகள் போக்குவரத்துக்கு கடும் இடையூறாகவே உள்ளது. சாலையோரத்தில் வளர்ந்து நிற்கும் புதர் செடிகளை முறையாக அகற்றாததால் சாலைகள் குறுகி உள்ளது.
    • மந்தகதியில் நடைபெற்று வந்த சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டதற்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு செல்ல பழனி சாலை, வத்தலக்குண்டு சாலை என 2 நெடுஞ்சாலைகள் உள்ளது.இதைத் தவிர்த்து கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் செல்வதற்கு அடுக்கம் வழியாக ஒரு சாலையும் உள்ளது. இந்த சாலைகள் மிகவும் மோசமான பராமரிப்பு காரணமாக பயணிகள் போக்குவரத்துக்கு கடும் இடையூறாகவே உள்ளது. சாலையோரத்தில் வளர்ந்து நிற்கும் புதர் செடிகளை முறையாக அகற்றாததால் சாலைகள் குறுகி உள்ளது.

    மேலும் நெடுஞ்சாலைகளில் மழைக்காலங்களில் நீர் வழிந்து ஓடுவதற்காக கால்வாய்கள் அமைக்கி றோம் என்ற பெயரில் சாலையை குறுக்கியுள்ள தால் கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் சாலையும், வத்தலக்குண்டு செல்லும் சாலையும் மிகவும் சுருங்கியுள்ளது. ஒரு கனரக வாகனம் வரும் சமயத்தில் மற்றொரு வாகனம் வந்தால் கடும் சிரமம் ஏற்படுகிறது. இரு வழி சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களால் சாலை கள் மட்டுமே சுருங்கி உள்ளது.

    மழைக்காலங்களில் எந்த வடிநீரும் இந்தக் கால்வாய்களுக்கு செல்வ தில்லை. 2 நெடுஞ்சாலை களிலும் அமைக்கப்பட்டு ள்ள கால்வாய்களில் குப்பைகள் மட்டுமே தேங்கி யுள்ளது. மேலும் கடந்த சில மாதங்க ளுக்கு முன் கொடைக்கா னலில் இருந்து பழனிக்கு செல்லும் சாலை யில் சவரிக்காடு பகுதியை ஒட்டிய மலைச்சாலை கனமழை காரணமாக சரிந்தது.

    இதனால் மாத க்கணக்கில் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்க ப்பட்டு மணல் மூட்டைகள் அடுக்கி சாலையை சீரமை க்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த சாலை சிதிலமடைந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை சாலை சீரமைப்பு ப்பணி முழுமை அடைய வில்லை.

    கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பழனி மலைச்சாலை வழியாக கொடைக்கானல் வரும் வாகனங்கள் சாலை சீரமைக்கப்படாத அந்த இடத்தில் வரும் போது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடுகிறது. அதோடு இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியப் போக்கால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை சீசன் காலங்களில் பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் அதிக மான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் பழனி கொடைக்கானல் மலை ச்சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளனர்.

    மேலும் பழனி-கொடை க்கானல், வத்தலகுண்டு- கொடைக்கானல் ஆகிய இரு நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் வடிநீர் வாய்க்கால் என்ற பெயரில் சாலையை குறுக்கி அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மந்தகதியில் நடைபெற்று வந்த சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டதற்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • கோடைசீசன் காலங்களில் பூக்கும் பிரம்மகமலம் நாற்று பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டது.
    • பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள இந்த பிரம்ம கமலபூவை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் உயர்ந்து காணப்படும் மரங்களும், கண்ணுக்கு விருந்த தாக காட்சியளிக்கும் மலைமுகடுகளும் தலை தட்டும் மேககூட்டங்களும் இதமான தட்பவெப்ப நிலையும் சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    தேர்வுகள் முடிந்து தொடர் விடுமுறை காரணமாக கொடை க்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து ள்ளனர். கோடைகாலம் என்பதால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் கொடைக்கானலுக்கு வந்து இயற்கை கொஞ்சும் எழிலை அனுபவித்து செல்கின்றனர்.

    இவர்களை கவரும் வகையில் கோடைசீசன் காலங்களில் பூக்கும் பிரம்மகமலம் நாற்று பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த பூ பூக்கும். பிரம்மகமலபூ பகல் நேரங்களில் மொட்டாகவும், இரவில் மட்டுமே பூக்கும் தன்மையும் கொண்டது.

    பூக்கும் நாட்களில் இருந்து 2 வாரங்களுக்கு பிரம்மக மலம் பூத்திருக்கும். கொடை க்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள இந்த பிரம்ம கமலபூவை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். சிலர் பூவின் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணை கவரும் வகையிலும் இந்த பிரம்மகமலபூ இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தெய்வத்தன்மை நிறைந்த இப்பூ பிரம்மாவிற்கு உகந்த பூவாக கருதப்படுகிறது.

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் மாணவி ஷாலினி பங்கேற்று வெற்றி பெற்றார்.
    • மாநில அளவில் சாதனை படைத்த பாடியூர் அரசு பள்ளி மாணவி ஷாலினிக்கு ஆசிரியர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பாடியூர் கிராமம் நாட்டாண்மைக் காரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலெட்சுமி இவர்களது 2-வது மகள் ஷாலினி (வயது 14). இவர் பாடியூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தமிழக அரசு சார்பில் கலைத்திறன் போட்டிகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வந்தது. இதில் வடமதுரை வட்டாரம், திண்டுக்கல் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் மாணவி ஷாலினி பங்கேற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடந்த மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடம் பிடித்தார். இதன் மூலம் தமிழக அரசு சார்பில் இவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து மாநில அளவில் சாதனை படைத்த பாடியூர் அரசு பள்ளி மாணவி ஷாலினிக்கு ஆசிரியர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. உள்ளூர் பொதுமக்களும் மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • கஞ்சப்பன்பட்டி பகுதியில் தேங்காய் கொட்டாங்குச்சி களை எரித்து பவுடராக்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • உரிய அனுமதியின்றி செயல்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கஞ்சப்பன்பட்டி பகுதியில் தேங்காய் கொட்டாங்குச்சி களை எரித்து பவுடராக்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொட்டாங்குச்சிகளை எரிப்பதால் ஏற்படும் புகை மற்றும் அதன் துகள்களால் விளைநிலங்கள் மாசடை கிறது. இவற்றை சுவாசிக்கும் மனிதர்களுக்கும் பலவித மான நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாசுகட்டு ப்பாட்டுத்துறை அதிகாரி அனிதா மற்றும் வருவா ய்த்துறை அதிகாரி கள், வேடசந்தூர் போலீசார் அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அரசு அனுமதி பெறாமல் நிறுவனம் செயல்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த எரித்த கொட்டாங்கு ச்சிகளை பொக்லைன் வாகனத்தை கொண்டு அழித்தனர். தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவிலின் அருகிலேயே மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் காளையின் உடல் அடக்கம் செய்ய ப்பட்டது.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளிகாசுகளையும், சைக்கிள், சில்வர் போன்ற பல்வேறு பரிசுபொருட்களை வென்றது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கவராயபட்டியில் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று இருந்தது. காளை வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்து விட்டது. இறந்த கோவில் காளையின் உடல் அங்குள்ள மந்தையில் வைக்கப்பட்டு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுற்றுவட்டார கிராம மக்களும் வந்து மரியாதை செலுத்தி சென்றனர்.

    இதைதொடர்ந்து கோவிலின் அருகிலேயே மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் காளையின் உடல் அடக்கம் செய்ய ப்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், கொசவபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளிகாசுகளையும், சைக்கிள், சில்வர் போன்ற பல்வேறு பரிசுபொரு ட்களை வென்ற கோவில் காளை திடீரென இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    • தண்ணீர் தொட்டிலில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே முள்ளூர் துறையை சேர்ந்தவர் சுஜின். இவருக்கும் குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்த மேரி வர்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    இதையடுத்து சுஜின் மனைவி வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஷகிப்சேன்டினோ (வயது 3) என்ற மகனும், 1½ வயதில் மகளும் இருந்தனர். சுஜின் மீன்பிடித் தொழில் செய்து வந்ததையடுத்து அவர் கடலுக்கு சென்று இருந்தார். வீட்டில் குழந்தைகள், மேரி வர்ஷா மற்றும் அவரது தாயார் இருந்தனர்.

    நேற்று மாலையில் மேரி வர்ஷா வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது மகன் ஷகிப்சேன்டினோ வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். வெளியே சென்றிருந்த மேரி வர்ஷா வீட்டிற்கு திரும்பியபோது மகனை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தை ஷகிப்சேன்டினோவை அந்த பகுதி முழுவதும் தேடினர். எங்கு தேடியும் குழந்தையை காணவில்லை. இவர்களது வீட்டு பக்கத்தில் உள்ள வீடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கிரகப்பிரவேசம் நடந்தது. அந்த வீட்டின் கேட் திறந்த நிலையில் இருந்தது. எனவே ஷகிப்சேன்டினோ அங்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் காணப்பட்டது. தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது ஷகிப்சேன்டினோ தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதைகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷகிப்சேன்டினோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டிலில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் சுண்ணாம்பு காளவாசல் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் நாகராஜன் என தெரிய வந்தது.
    • போலீசார் சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் விசாரித்தபோது இவர் மீது பல்வேறு வழக்குகள் அந்த மாவட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் ராமராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு வாலிபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓட முயன்றார். இருந்தபோதும் போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் சுண்ணாம்பு காளவாசல் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் நாகராஜன் (வயது 23) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது மிகப்பெரிய அளவிலான பட்டாக்கத்தியை மறைத்து வைத்திருந்தார். இது எதற்கு என்று கேட்டதற்கு வீடுகளில் கொள்ளையடிக்க செல்லும் போது யாரேனும் மிரட்டினால் குத்திக் கொலை செய்து விட்டு தப்புவதற்காக வைத்திருந்தேன் என்றார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் விசாரித்தபோது இவர் மீது பல்வேறு வழக்குகள் அந்த மாவட்டத்தில் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு நல்லக்கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • போதிய வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவற்றை உடனடியாக அமைக்கவும், ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதனால் நகர் மற்றும் வனப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்த பின்னர் நகரில் உள்ள நட்சத்திர ஏரி மற்றும் பல்வேறு பகுதிகளில் குவிந்தனர். போதிய வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக கழிப்பறைகள், போதிய அளவில் இல்லாத தால் பெண்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இ-டாய்லெட் அமைக்க ப்பட்டு இருந்த நிலையில் அனைத்துமே செயல்படாமல் உள்ளது.

    இதன் காரணமாக ஆண்கள் திறந்த வெளியிலேயே கழிப்பறை களாக பயன்படு த்தினர். சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த காலங்களைப் போல தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவற்றை உடனடியாக அமைக்கவும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில், தனியார் வீடுகளும் அறைகளாக மாற்றப்பட்டு அதிக வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை பிரதான நெடுஞ்சாலைகளில் கடைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை யினரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் மூஞ்சிக்கல் சாலை சந்திப்பில் வேன்களை நிறுத்தி உணவகங்கள், நினைத்த இடத்தில் எல்லாம் காய்கறி கடைகள் என அமைத்து பொதுமக்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்ல முடியாமலும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சாலையை இலகுவாக கடக்க முடியாமலும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதிகமான சுற்றுலா பயணிகள் வர கூடும் என்பதால் மே மாதத்திற்குள் பிரதான நெடுஞ்சாலையில் ஆக்கிர மிப்புகளை அகற்ற வில்லையெனில் மே மாத கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் கடும் இன்ன லுக்கு ஆளாகும் சூழல் உருவாகும்.


    • அய்யலூரிலிருந்து எரியோடு செல்லும் சாலையில் மலையைக் குடைந்து பாறைகள், கற்களை எடுத்துச் செல்கின்றனர்.
    • குஜிலியம்பாறை, பாளையம் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களில் அனுமதியின்றி இரவோடு இரவாக கற்கள் உடைத்து எடுத்துச் செல்லப்படுகின்றன. அய்ய லூரிலிருந்து எரியோடு செல்லும் சாலையில் மலையைக் குடைந்து பாறைகள், கற்களை எடுத்துச் செல்கின்றனர்.

    இதுமட்டுமின்றி அனுமதி சீட்டே இல்லாமல் செம்மண், நீர்நிலைகளில் மண் எடுக்கப்படுகிறது. இதனால் குஜிலியம்பாறை, பாளையம் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அதிகாரிகள் இங்கு அதிரடி சோதனை நடத்த வேண்டும். கனிம கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழும் நாள் நிழல் இல்லாத நாள் ஆகும்.
    • சூரியன் தலைக்கு மேல் இருக்கும் போது நிழலானது எந்த பக்கமும் சரியாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும்.

    கொடைக்கானல்:

    ஆண்டுக்கு 2 முறை மட்டும் நிகழக்கூடிய அரிய நிகழ்வான நிழல் இல்லாத நாள் நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் மட்டும் தென்பட்டது. பூமியானது 23 டிகிரி சாய்ந்து அட்ச ரேகையில் சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் கோணமும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டே இருக்கும். அவ்வாறு மாறும் போது ஒரு சில நாட்களில் மட்டும் பூமியின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருக்கும். அப்போது நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழும் நாள் நிழல் இல்லாத நாள் ஆகும்.

    மேலும் இந்த நாள் பூஜ்ஜிய நிழல் நாளாக அமைகிறது. இந்த நிகழ்வி னை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் நண்பகல் 12.20 மணியளவில் சூரியன் தலைக்கு மேல் இருக்கும் போது நிழலானது எந்த பக்கமும் சரியாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அல்லது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அருகிலேயே விழும் நிகழ்வினை வான் இயற்பி யல் ஆராய்ச்சியாளர் எபிநேசர் காட்சிப்படு த்தினார். மேலும் இந்த அரிய நிகழ்வினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் இது போன்ற நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் 26- ஆம் தேதி 12.22 மணிக்கு நிகழ உள்ளதாக தெரிவித்தனர்.

    • சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
    • சிதறி கிடக்கும் கற்கள் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன.

    நத்தம்:

    நத்தம்-மதுரை செல்லும் சாலையில் கோவில்பட்டி, வத்திப்பட்டி, பரளி, செல்லப்பநாயக்கன்பட்டி, பண்ணுவார்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நத்தத்தில் இருந்து மதுரை செல்லும் முக்கிய வழித்தடம் என்பதால் அரசு, தனியார் பஸ், லாரி, கார், வேன், பள்ளி வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

    இந்த சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சிதறி கிடக்கும் கற்கள் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன. இதனால் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள்கூட செல்ல முடியவில்லை.

    எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×