என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவி ஷாலினி.
மாநில வினாடி வினா போட்டியில் வென்று வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
- அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் மாணவி ஷாலினி பங்கேற்று வெற்றி பெற்றார்.
- மாநில அளவில் சாதனை படைத்த பாடியூர் அரசு பள்ளி மாணவி ஷாலினிக்கு ஆசிரியர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பாடியூர் கிராமம் நாட்டாண்மைக் காரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலெட்சுமி இவர்களது 2-வது மகள் ஷாலினி (வயது 14). இவர் பாடியூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
தமிழக அரசு சார்பில் கலைத்திறன் போட்டிகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வந்தது. இதில் வடமதுரை வட்டாரம், திண்டுக்கல் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் மாணவி ஷாலினி பங்கேற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடந்த மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடம் பிடித்தார். இதன் மூலம் தமிழக அரசு சார்பில் இவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாநில அளவில் சாதனை படைத்த பாடியூர் அரசு பள்ளி மாணவி ஷாலினிக்கு ஆசிரியர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. உள்ளூர் பொதுமக்களும் மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






