search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் 3 நாட்களில் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை
    X

    கொடைக்கானல் நகரின் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.

    கொடைக்கானலில் 3 நாட்களில் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை

    • போதிய வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவற்றை உடனடியாக அமைக்கவும், ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதனால் நகர் மற்றும் வனப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்த பின்னர் நகரில் உள்ள நட்சத்திர ஏரி மற்றும் பல்வேறு பகுதிகளில் குவிந்தனர். போதிய வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக கழிப்பறைகள், போதிய அளவில் இல்லாத தால் பெண்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இ-டாய்லெட் அமைக்க ப்பட்டு இருந்த நிலையில் அனைத்துமே செயல்படாமல் உள்ளது.

    இதன் காரணமாக ஆண்கள் திறந்த வெளியிலேயே கழிப்பறை களாக பயன்படு த்தினர். சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த காலங்களைப் போல தற்காலிக கழிப்பறைகள், நடமாடும் கழிப்பறைகள் போன்றவற்றை உடனடியாக அமைக்கவும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில், தனியார் வீடுகளும் அறைகளாக மாற்றப்பட்டு அதிக வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை பிரதான நெடுஞ்சாலைகளில் கடைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை யினரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் மூஞ்சிக்கல் சாலை சந்திப்பில் வேன்களை நிறுத்தி உணவகங்கள், நினைத்த இடத்தில் எல்லாம் காய்கறி கடைகள் என அமைத்து பொதுமக்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்ல முடியாமலும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சாலையை இலகுவாக கடக்க முடியாமலும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதிகமான சுற்றுலா பயணிகள் வர கூடும் என்பதால் மே மாதத்திற்குள் பிரதான நெடுஞ்சாலையில் ஆக்கிர மிப்புகளை அகற்ற வில்லையெனில் மே மாத கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் கடும் இன்ன லுக்கு ஆளாகும் சூழல் உருவாகும்.


    Next Story
    ×