search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shadowless day"

    • எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம்.
    • உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    திருச்சி:

    தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வதுபோல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்கு உள்ளேயே விழுவதால் அதன் நிழலைப் பார்க்க முடியாது.

    இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். இந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கின்றனர்

    இதன்படி நடப்பாண்டு திருச்சி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை ( வியாழக்கிழமை) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19-ந்தேதி) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில்,

    இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம். உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிந்து கொள்ள https:// alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் சென்று, ஊர் பெயரை தட்டச்சு செய்தால் உரிய நேர விவரம் கிடைக்கும் என்றார்.

    • நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழும் நாள் நிழல் இல்லாத நாள் ஆகும்.
    • சூரியன் தலைக்கு மேல் இருக்கும் போது நிழலானது எந்த பக்கமும் சரியாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும்.

    கொடைக்கானல்:

    ஆண்டுக்கு 2 முறை மட்டும் நிகழக்கூடிய அரிய நிகழ்வான நிழல் இல்லாத நாள் நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் மட்டும் தென்பட்டது. பூமியானது 23 டிகிரி சாய்ந்து அட்ச ரேகையில் சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் கோணமும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டே இருக்கும். அவ்வாறு மாறும் போது ஒரு சில நாட்களில் மட்டும் பூமியின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருக்கும். அப்போது நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழும் நாள் நிழல் இல்லாத நாள் ஆகும்.

    மேலும் இந்த நாள் பூஜ்ஜிய நிழல் நாளாக அமைகிறது. இந்த நிகழ்வி னை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் நண்பகல் 12.20 மணியளவில் சூரியன் தலைக்கு மேல் இருக்கும் போது நிழலானது எந்த பக்கமும் சரியாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அல்லது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அருகிலேயே விழும் நிகழ்வினை வான் இயற்பி யல் ஆராய்ச்சியாளர் எபிநேசர் காட்சிப்படு த்தினார். மேலும் இந்த அரிய நிகழ்வினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் இது போன்ற நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் 26- ஆம் தேதி 12.22 மணிக்கு நிகழ உள்ளதாக தெரிவித்தனர்.

    ×