என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தருமபுரி அருகே கள்ளச் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளத் தனமாக சாராயம் கடத்தி வருவதாக கிடைத்த ரக சிய தகவலை அடுத்து கோட்டப்பட்டி போலீசார் ஆண்டியூர் கூட்ரோடு அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பையர் நாயக்கன்பட்டி பகுதியில் இருந்து தீர்த்தமலை நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

    அதில் ஒரு கட்டைப்பை யில் சுமார் 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சாராயத்துடன் 2 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் காரில் வந்த வர்களை பிடித்து விசார ணை செய்ததில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் சுரேஷ் (வயது 39), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் செல்லதுரை
    (34 ) என்பது தெரியவந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • இண்டூர் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்
    • சீட்டுக்கட்டு, பணம் பறிமுதல்

    தருமபுரி மாவட்டம் இண்டூர் போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது தலவாய் அள்ளி சமுதாயக்கூடம் எதிரில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தபோது பணம் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் சூதாடியது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீ சார் சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த தில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (48), ராமராஜ் (61) முருகேசன் (42) கோபால் (60) சிவக்குமார் (30) ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களிட மிருந்து சீட்டு கட்டுகள், மற்றும் ரூ. 250 பணம் ஆகியவைகளை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரூர் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காட்டெருமை தாக்கி காயம் அடைந்தார்.
    • வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி ஊராட்சி மன்றதுணை தலைவராக இருப்பவர் சக்திவேல் வயது(28). இவர் கடந்த 28 ந்தேதி, தருமபுரி கலெக்டர் அலுவலக கூட்டத்தில்கலந்து கொண்டு விட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சித்தேரி மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டம்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது, அவரை ரோட்டில் நின்று வழிமறித்து காட்டெருமை ஒன்று அவரை தாக்கியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உதவி கோரி அவர் எழுப்பிய சத்தம் கேட்டுட வந்த கிராம மக்கள், அவரை மீட்டு அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த தகவலின்பேரில், உதவி வனபாதுகாவலர் சரவணன், அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டன் ஆகியோர் சக்திவேலை சந்தித்து காட்டெருமை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தினர்.

    • தருமபுரி அருகே தனியார் கல்லூரி பேராசிரியை மாயம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பேராசிரியை தேடி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லதா (வயது45). இவரது மகள் ரசிகப்பிரியா (23). இவர் தருமபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் லதா தேடிபார்த்தார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ரசிகப்பிரியா மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து லதா கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தன் மகளை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பேராசிரியை தேடி வருகின்றனர்.

    • வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபார் உயிரிழந்தார்.
    • போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள ஆழ்வார்ஐயர் தெருவை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 26). இவர் சொந்த வேலை காரணமாக தருமபுரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சம்பவத்தன்று கிருஷ்ணகிரியில் உள்ள சேலம்-ஓசூர் நெடுஞ்சாலையில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் முன்னால் சென்று கொண்டிருந்த பால்வேன் ஒன்று திடீரென்று பிரேக் போட்டு நின்றது. அப்போது ஹரிபிரசாத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பால் வேனின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைபற்றி பிரேத சோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லில் கடந்த 9 தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.
    • மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பென்னாகரம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் கடந்த 9 தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து 4 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன்காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறாக பாய்ந்து ஓடுகிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மலை கிராமங்களை இணைப்பதற்கு தார் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.
    • மலை கிராமங்களுக்கு புதிய பஸ் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது,

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் என 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும், மலை வாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களையும், மருத்துவமனை, அரசின் உதவிகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவ தற்கும் சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.பஸ்கள் இயக்க வேண்டும் என்று அரசிற்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியை சார்ந்த மலைவாழ் மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ். சரவணனிடம் பஸ் வசதி வேண்டும், ஏற்காடு மலை கிராமங்களை இணைப்பதற்கு தார் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.

    அவர்களது நியாயமான கோரிக்கையை தர்மபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரிடமும், மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

    இதையடுத்து மலை கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட தருமபுரி மாவட்ட கலெக்டர், மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் கிராம மக்களின் தேவைகளை குறித்து அறிக்கையாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    இதையடுத்து முதற்கட்டமாக குறிப்பிட்ட அளவு மலை கிராமங்களை ஏற்காடு மலையோடு இணைக்கும் புதிய தார்சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தற்போது இந்த மலை கிராமங்களுக்கு புதிய பஸ் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது,

    அதன்படி இந்த மலைவாழ் மக்கள் வாழும் கிராம மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்வதற்காக முதல் பஸ் இயக்கம் போதகாடு பகுதியில் இருந்து பையர் நத்தம், பொம்மிடி, கடத்தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது.

    இன்று காலை பஸ்சின் முதல் ஓட்டத்தை பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    பஸ்சிற்கு ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் கிராம மக்கள் வரவேற்றனர். மலை கிராமங்களுக்கு பஸ் இயக்கப்படுவது குறித்து கிராம மக்கள் கூறுகையில்:-

    எங்கள் கிராமப் பகுதிக்கு நீண்டகால கோரிக்கையாக இருந்த பஸ் வசதி கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

    இதன் மூலமாக எங்களது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பள்ளி கல்லூரிக்கு சென்று வருவர். நாங்களும் மிக எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் நகரப் பகுதிக்கு சென்று வருவோம்.

    இதற்கு முழு முயற்சி எடுத்த ஓன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி என தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

    மேலும் கிராம மக்கள், எங்களுக்கு ஏற்காடு மலை கிராமங்களை இணைக்கும் தார் சாலை அமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளனர்.

    • விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், லாரி பார்க்கிங் பகுதிக்கு அருகே தனியார் ஆம்னி பஸ் விபத்தால் 20 பேர் காயம் அடைந்தனர்.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த காசி (29) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி பென்னாகரம் பிரிவு சாலையில் அந்த ஆம்னி பஸ் வந்தது. அப்போது அங்கு லாரி பார்க்கிங் அருகே வாகனங்கள் மெதுவாக கடந்து செல்வதற்காக சாலையி்ல் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு இருப்பதை கவனிக்காமல், வேகமாக வந்த ஆம்னி பஸ் மோதியது.

    இதில் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அதே இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து உடனே தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ், ஜோசப், சுஜாதா, கீதா, மாளவிகா, எடிசன், ஹான்சன், ஆகிய 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவர் உள்பட 13 பேர் லேசான காயங்களுடன் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த விபத்து குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம்.

    தருமபுரி வட்டாரத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு 2023-24 பருவத்திற்கான நெல் மற்றும் பருத்தி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

    குறுவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்ட பயிர்களை சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதி யானவர்கள். பயிர் கடன் பெறும் விவசாயிகளும் இதில் சேர்த்து க்கொள்ளபடுவர். மற்ற விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம்.

    விதைப்பு தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலையில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்காலத்தில் பயிர் இழப்பு, அறுவடைக்குப்பின் ஏற்படும் மகசூல் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடற்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவற்றிற்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

    எனவே நெல் (சம்பா பருவம்) மற்றும் பருத்தி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பெருமளவில் சேர்ந்து பயனடையமாறு நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    • சாமிக்கு அன்னத்தால் அலங்கார சேவை நடைபெற்றது.

    தருமபுரி, அக்.29-

    ஐப்பசி மாத பவுர்ண மியையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து சிவன் கோவில்க ளிலும் அன்னா பிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை யொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னாபி ஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அன்னா–பிஷேகம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. புகழ்பெற்ற தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் புலனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை யொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்கார சேவை நடைபெற்றது.

    தருமபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனா கிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை யொட்டி சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், வாசனை திரவி யங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    பின்னர் 30 கிலோ எடை கொண்ட அரிசியை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவைக் கொண்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

     இதேபோல் தருமபுரி கடை–வீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா ணேஸ்வரர் கோவில், தருமபுரி குமார சாமிப்பேட்டை சிவகாம சுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், தருமபுரி ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் உடனாகிய ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவில், தருமபுரி அடுத்த கடகத்தூர் சோழவராயன் ஏரி அருகே உள்ள வில்வ நாயகி அம்மை உடன் அமர்ந்து விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னம் மற்றும் பல்வேறு வகையான பலகாரங்களைக் கொண்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

    தருமபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னா பிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி ணசனம் செய்தனர்.

    இதேபோல் தருமபுரி அடுத்த சவுளுப்பட்டியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற பால்வண்ணநாதர் கோவிலில் சிறப்பு அன்னா–பிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல் காரிமங்கலம் மலையில் உள்ள அரு ணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையில் உள்ள காவேரி அம்மாள் உடனா கிய சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்க ளிலும் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அண்ணா அபி ஷேக விழா நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டா–ரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னா பிஷேக விழாவில் ஏராள மான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில்ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடை பெற்றது அன்னாபிஷேக தரிசனத்தில் சுவாமி சிறப்பு அலங்கா ரத்தில் அருள்பா லித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

    இதேேபால கிருஷ்ணகிரி மலையடி வாரத்தில் அமைந்து ள்ள கவிஸ்வர கோவிலில் ஐப்பசி மாதத்தில் பௌர்ண மியை முன்னிட்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி அடுத்த கள்ளுக்குறுக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவர் கோவிலில் ஐப்பசி பவுர்ண மியை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடை பெற்றது . இதில் பைரவர் லிங்கத்தில் சாமி சிறப்பு அலங்கா ரத்தில் அருள்பா லித்தார். ஏராளமானோர் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கப்பட்டது.

     ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவுத்தெ ருவில் உள்ள சோமேஸ்வரர் கோவில், கும்பாரத்தெருவில் உள்ள கும்பேஸ்வரர் கோவில், காமராஜ் காலனியில் உள்ள காசிவிசு வநாதர் ஆலயம், நஞ்சுண்டே ஸ்வர் கோவில், பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னா பிஷேகம் நடைபெற்றது.

    அன்னாபிஷேக தரிசனம் கண்டால், பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும் என்று பெரியவர்கள் கூறுவர். இந்த கோவில்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்தனர்.

    • பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிற்சாலையில் மின் மோட்டாரை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • வழக்கு பதிவு செய்து நவீன்குமாரை சிறையில் அடைத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தொழிற் சாலையில் மின் மோட்டார் திருடிய வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியை சார்ந்தவர் சேகர். இவரது மகன் நவீன் குமார் (வயது 26). இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் மஞ்சவாடி கணவாய் அருகே உள்ள வெள்ளையப்பன் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் கெமிக்கல் ஆலையில் கடந்த 6ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு வெளியில் வரும்போது ஆலையில் இருக்கும் வாட்ச்மேனுக்கு தெரியாமல் 3 எச்.பி திறன் கொண்ட மின் மோட்டாரை பதுக்கி வைத்து எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது சந்தேகத்தின் பேரில் ஆலை நிர்வாகம் தொழிலாளி நவீன் குமாரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக எடுத்து சென்ற மின் மோட்டாரை கைப்பற்றினர்.

    இதையடுத்து இவர் மேலும் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஆலை நிர்வாகம் இவரை பிடித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து வாலிபர் நவீன்குமாரை சிறையில் அடைத்தனர். வேலை செய்யும் தொழிற் சாலையிலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரால் ஆலை நிர்வாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பென்னாகரம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுப்பாட்டில்கள் பறிமுதல்.

    பெரும்பாலை போலீசார் அனுமந்தபுரம் சாமியார் கொட்டாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு சாக்குபையில் ஒருவர் மதுப்பாட்டிகளை மறைத்து வைத்து விற்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது அவர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஏரங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜி என்பவர் மகன் முருகன்(55) என்பதும் அவர் அவர் சட்ட விரோதமாக மதுப்பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு் விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதே போன்று பெரும்பாலை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மஞ்ச நாயக்கன்அள்ளி கரூர் மாரியம்மன் கோவில் அருகே பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு சாக்கு பையில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது பென்னாகரம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 61) என்பது தெரியவந்தது. அவர் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்று வந்ததை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 15 மதுப்பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.  

    ×